‘சக்ரா’ ரிலீசான சில மணி நேரத்திலேயே அப்படத்தின் ஹெச்.டி பிரிண்டை கசியவிட்ட தமிழ் ராக்கர்ஸ்….!

மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் 2ம் பாகம் மற்றும் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா படங்கள், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் கசிந்துள்ளது.

கொரோனாவால் தியேட்டர்கள் மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது தான் திரைத்துறையும் பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது.

இந்த நிலையில் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் விஷால் நடிப்பில் உருவான சக்ரா திரைப்படம் இன்று தியேட்டர்களில் ரிலீசாகியது.

சக்ரா ரிலீசான ஒரு சில மணி நேரத்திலேயே அப்படத்தின் ஹெச்.டி பிரிண்டை தமிழ் ராக்கர்ஸ் கசியவிட்டுள்ளது. இதன் மூலம் இப்படத்தின் வசூல் பாதிக்கும் என கருதப்படுகிறது. முன்னதாக தமிழ் ராக்கர்ஸ் அட்மினை கட்டாயம் பிடித்து சிறையில் தள்ளாமல் விடமாட்டேன் என விஷால் சபதம் ஏற்றிருந்தது நினைவுகூறத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.