சினிமாவுக்கும் ஆன்லைன் வகுப்பா.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ.. டூலெட் கதாநாயகனின் வித்தியாசமான ஐடியா!

|

சென்னை : சர்வதேச திரைப்பட விழாக்களில் மிகுந்த கவனம் பெற்று தமிழ் திரையுலகிலும் பலராலும் பாராட்டப் பெற்று விமர்சனரீதியாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தப்படம் தான் டூலெட் .

பல அறிமுக இயக்குனர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய டூலெட் படம், அகண்டன் என்கின்ற படத்தின் மூலமாக முழுக்க முழுக்க முதன்முதலில் ஐபோன் மொபைலில் படம் பிடிக்கபட்டது .

இந்த படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகருமான சந்தோஷ் நம்பிராஜன் வளர்ந்து வரும் கதாநாயகர்களுக்கு தான் கற்றுக்கொண்ட சினிமா அனுபவத்தையும் ,நடிப்பையும் ஆன்லைன் மூலமாக இலவசமாக கற்றுக் கொடுக்கிறார் .

நல்ல வரவேற்பு

2017 ஆம் ஆண்டு வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தப்படம் தான் டூலெட். பல விருதுகளையும் இப்படம் அள்ளிக்குவித்தது வித்யாசமான கதைக்களத்துடன் வெளிவந்த இப்படம் பல அறிமுக இயக்குனர்களுக்கு ஒரு பாடமாகவே அமைந்து என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆன்லைன் வகுப்பு

ஆன்லைன் வகுப்பு

கொரோனா காலகட்டம் என்பதனால் அனைவரும் வீட்டிலிருந்தபடியே வேலைகளும் , ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் .டூலெட் கதாநாயகனும் இந்த வாய்ப்பை நல்ல முறையாக பயன்படுத்தி வருகிறார் . தான் கற்று கொண்ட சினிமா அனுபவத்தையும்,நடிப்பையும் பலருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக ஆன்லைன் வகுப்பு மூலன் சொல்லிக்கொடுத்து வருகிறார்.

அனைவரும் உண்டு

அனைவரும் உண்டு

அனைவரும் வியந்து பார்க்கக்கூடிய ஒரு துறை என்றால் அதில் சினிமாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.யாரையும் சினிமா ஆசை விட்டு வைப்பதில்லை.திறமையை வைத்து கொண்டு சினிமாவில் வெற்றி பெறவேண்டும் என்ற கனவுகளோடு இருப்பவர்கள் ஏராளம்.சினிமாவில் முதல் படி எது ,எதை செய்யவேண்டும் என்று கற்றுக்கொடுக்க யாரும் இல்லாமல் தடுமாறுபவர்கள் பலர் உண்டு .அவர்களுக்காக புது முயற்சியை எடுத்துள்ளார் டூலெட் நாயகன்.

பல கருத்துக்கள்

பல கருத்துக்கள்

தனது சினிமா அனுபவத்தையும் ,நடிப்பையும் ஆன்லைன் மூலமாக இலவசமாக கற்றுக் கொடுக்கிறார் சந்தோஷ். இது குறித்து அவர் கூறுகையில் வழக்கமாக சினிமாவில் யாருமே கற்றுக் கொடுக்க மாட்டார்கள். தனக்கு தெரிந்தை தனக்கு மட்டுமே தெரிய வேண்டும் அதன் மூலம் நாம் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்றுதான், பெரும்பாலும் நினைப்பார்கள்.

இப்போது ஆசிரியர்

இப்போது ஆசிரியர்

நான் எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு மாணவன் .ஒளிப்பதிவாளர் இயக்குனர் செழியனிடம் 10 ஆண்டுகாலம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளேன். அவர் என்னிடம் எந்த தொகையையும் குருதட்சணையாக வாங்கியது இல்லை. அதுதான் ஒரு குரு சிஷ்யனுக்கு ஆன உறவு அவர் கற்றுக்கொண்ட வித்தை எங்களுக்கும் கற்றுக் கொடுத்தார். அதை தான் நான் மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் .இன்றைய இணைய உலகத்தில் நாம் எங்கிருந்தும் சினிமாவைக் கற்றுக்கொள்ள கூடிய ஒரு சூழல் உருவாகி இருப்பது ஒரு வரவேற்கத்தக்க ஒரு விஷயம்.

டிஜிட்டல் யுகம்

டிஜிட்டல் யுகம்

சினிமா என்பது இன்னும் யாரும் எட்ட முடியாத ஒரு உயரத்தில் உச்சாணிக்கொம்பில் இருப்பதாக நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் எளிமையான சினிமாக்கள் உருவாவதற்கு இந்த டிஜிட்டல் மொபைல் புரட்சி காரணமாக உள்ளது. எனது இருபது ஆண்டுகால அனுபவத்தை பகிர்ந்து கொள்வதன் மூலம் ஏழை எளிய நடுத்தர மக்களின் சினிமா கனவை நனவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன் .

வெற்றிக்கு வழி

வெற்றிக்கு வழி

சினிமா என்பது இன்னுமொரு மாயை போல நம்மால் முடியாது என்று நினைப்பவர்களுக்கு எப்போதுமே முடியாது என்றுதான் இருக்கும் நம்மால் முடியும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக் கொள்பவர்கள் கற்றுக்கொண்டு அதில் வெற்றி பெறுகிறார்கள் .எனது யூடியூபில் அவர்களுக்கான ஒரு வழிகாட்டியாக தான் இருக்கிறேன். அவர்களும் இதில் இணைந்தால் அவர்கள் கற்றுக்கொள்ளலாம் சினிமாவை அடிப்படையான ஒரு ஒளிப்பதிவு ,திரைக்கதை, இயக்கம், நடிப்பு, வியாபாரம் எல்லாவற்றையும் பற்றி பேசக்கூடிய ஒரு தளமாக இருக்கிறது இதன் மூலம் பரந்துபட்டு அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு சூழல் உருவாகும்.

நல்ல சூழல்

நல்ல சூழல்

சினிமா பார்ப்பவர்கள் அனைவருக்குள்ளுமே ஒரு சினிமா இருக்கிறது அந்த சினிமா கனவாக இருப்பது நிஜம் ஆக்குவதற்கான ஒரு சின்ன வழிகாட்டி தான் என்னுடைய பிரத்யேகமான யூடியூப் சேனல் இதில் சினிமா சம்பந்தப்பட்ட கேள்வி பதில்களும் இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது அதன் மூலம் உங்கள் இருக்கக்கூடிய கேள்விகளை கேட்பதன் மூலம் பதில் சொல்லக்கூடிய வீடியோவும் நான் போடுகிறேன் இதன் மூலம் ஒரு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல சூழலை உருவாக்க முடியுமென நம்புகிறேன்.

வியாபார பலம்

வியாபார பலம்

இதில் முக்கியமாக ஒரு மொபைல் கேமராவில் வைத்து ஒரு சினிமாவை எப்படி உருவாக்குவது எடுக்கப்பட்ட சினிமாவை நாம் வெற்றிகரமாக எப்படி நம் வெளியிடுவது மற்றும் வெறும் சினிமா என்பது நம் ஒரு பார்ட் டைம் ஜாப் ஆக செய்ய முடியுமா இன்னொரு சினிமா என்பது சென்னைக்கு தான் வரவேண்டுமா நாம் இருக்கின்ற ஊரில் சினிமா கற்றுக்கொள்ள முடியுமா அதுல சினிமா எடுக்க முடியுமா என்றெல்லாம் நம் விவாதப் பொருளாக உள்ளது .

வெப் சீரிஸ் உட்பட

வெப் சீரிஸ் உட்பட

இதற்காக நம்பி சினிமா ஸ்கூல் என்று இணையத்தில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.இலவசமாக 20க்கும் மேற்பட்ட நடிப்பு பயிற்சி வழங்குவதற்கான வீடியோக்களும் இதில் உள்ளது.திரைக்கதை எழுவதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டு அணைத்து ரகப் படங்கள் மட்டும் அல்லாமல் வெப்சீரிஸ் உள்பட அனைத்து விதமான திரைக்கதை பயிற்சிகளும் கொடுக்கப்படுகின்றன.

பல வாய்ப்புகள்

பல வாய்ப்புகள்

இதுவரை 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து பயன் பெறுகிறார்கள் அவர்களுக்கு நம்பி சினிமாஸ் தயாரிக்கும் படங்களில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. வரும் காலத்தில் நம்பி சினிமா ஸ்கூல் பிரத்தியேகமான ஒரு படத்தைத் தயாரிக்கும் திட்டத்தில் உள்ளது. அதில் நடிப்பதற்கு உதவியாளராக ஒளிப்பதிவு மற்றும் உதவி இயக்குனர் திரைக்கதை பயிற்சி இருப்பவர்கள் தயாரிப்பில் இருப்பவர்கள் அனைவருமே அதில் கலந்து கொண்டு ஒரு நம்பி சினிமா ஸ்கூலில் இருந்து முதன் முதலில் ஒரு படத்தை உருவாகும் திட்டத்தில் இருக்கிறது.இவ்வாறு சந்தோஷ் கூறினார் .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.