தங்கம், பங்கு சந்தையை விஞ்சிய Bitcoin.. $1 டிரில்லியனுக்கு அருகில் சந்தை மதிப்பு.. இது வேற லெவல்..!

உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் நாணயமான பிட்காயினின் சந்தை மதிப்பு கிட்டதட்ட 1 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது.

இது தங்கம் மற்றும் பங்கு சந்தை போன்ற பாரம்பரிய முதலீட்டு சந்தைகளின் சொத்து மதிப்பினை விட மிக அதிகம்.

சர்வதேச அளவில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் பிட்காயின் முதலீடு, பல்வேறு நாடுகளிலும் முதலீட்டாளர்களை ஈர்த்து வருகின்றது.

நம்பிக்கை அதிகரிப்பு

சமீபத்திய வாரங்களில் சர்வதேச முதலீட்டாளர்களான டெஸ்லா, மாஸ்டர்கார்டு, பிஎன்ஒய் மெல்லன் உள்ளிட்ட நிறுவனங்கள் பிட்காயினை ஏற்றுக் கொள்ளவதற்கான அறிகுகள் உள்ள நிலையில், பிட்காயின் முதலீட்டின் மீது இன்னும் நாளுக்கு நாள் நம்பிக்கை அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் நடப்பு ஆண்டில் மட்டும் பிட்காயினின் சந்தை மதிப்பு 415 பில்லியன் டாலருக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

கிரிப்டோ இன்டெக்ஸ்

கிரிப்டோ இன்டெக்ஸ்

பிட்காயின் மற்றும் நான்கு நாணயங்களை உள்ளடக்கிய ப்ளூம்பெர்க் கேலக்ஸி கிரிப்டோ இன்டெக்ஸ் இரு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது. இது ஊக வணிகர்கள் என்று கூறப்படும் Speculators, கார்ப்பரேட் பொருளாளார்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் பிட்காயின் ஏற்றத்திற்கு தூண்டியதாக கருதப்படுகிறது.

மொத்த செயல்பாடு

மொத்த செயல்பாடு

இந்த டிஜிட்டல் கரன்சி பணவீக்கத்திற்கு எதிராக ஒரு சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் பிட்காயின் மதிப்பு 51,300 டாலர்களாக வர்த்தகமாகியது.

இதற்கிடையில் கிரிப்டோ இன்டெக்ஸ்களின் செயல்திறன்கள் 2021ல் தங்கம் மற்றும் பத்திரங்கள், பங்கு சந்தைகளின் செயல்பாடுகளை விட விஞ்சியுள்ளது.

டெஸ்லாவின் சூப்பர் அறிவுப்பு
 

டெஸ்லாவின் சூப்பர் அறிவுப்பு

உலக நாடுகளின் கவனத்தினை ஈர்த்து வரும் பிட்காயின் மதிப்பானது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், பல்வேறு நாடுகளும் இதனை ஆதரிக்க தொடங்கியுள்ளன. சமீபத்தில் டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், பிட்காயின் 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்தததாக செய்திகள் வெளியானது. அது மட்டும் அல்ல தங்கள் நிறுவனத்தில் பிட்காயினை செலுத்தியும் சேவைகளை பெறலாம் என்று,பிட்காயினுக்கு ஆடஹ்ரவு தந்துள்ளார். எலானின் இந்த அறிவிப்புக்கு பிறகு பிட்காயின் மதிப்பானது தொடர்ச்சியாக புதிய உச்சம் தொட்டு வருகின்றது.

பிட்காயின் எச்சரிக்கை

பிட்காயின் எச்சரிக்கை

ஒரு சாரார் இந்த பிட்காயினை ஆதரித்து வந்தாலும், மறுதரப்பில் சில நிபுணர்கள் பிட்காயின் நீண்டகாலத்திற்கு பிட்காயின் நிலையற்றதாக இருக்கும். ஆனால் மத்திய வங்கிகளில் என்ன நடக்கிறது என்பதோடு, அதன் மேக்ரோ பொருளாதாரத்தினை அடிப்படையாக கொண்டது எனவும் கூறியுள்ளனர். இதனால் நீண்டகால நோக்கில் பிட்காயின் எப்படி இருக்கும் என்பதனை கணிப்பது கடினம்.. இது நிலையில்லாதது என்றும் கூறியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.