திமுக தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தாங்கள் செல்லும் இடங்களில் திட்டமிட்டு மக்களை கேள்வி கேட்க வைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பரப்புரை கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதில் மக்கள் தங்கள் கோரிக்கைகளை ஸ்டாலினிடம் தெரிவிப்பார்கள். அதற்கு திமுக ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் தெரிவிப்பார்.
சிலர் தங்கள் வறுமையை கூறும் திமுக சார்பில் உதவியும் செய்யப்படுகிறது. ஆனால் இதெல்லாம் ஐ பேக் நிறுவனத்தால் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை என்றும், யார் பேச வேண்டும், பேச வேண்டாம் என அவர்கள் முடிவு செய்கின்றனர் என்று ஏரியூர் பாமக ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் குற்றம் சாட்டியுள்ளார்.
அதே போல் கனிமொழி செல்லும் இடங்களில் கூட ஐ பேக் நிறுவனம் இதுபோன்று திட்டமிட்டு சில காட்சிகளை அரங்கேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் எல்லா கட்சிகளும் இதே போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதே பலரின் கருத்து.
ஏனென்றால் 5 ஆண்டுகள் அமைதியாக இருந்த பாமக தேர்தல் வரும் நேரத்தில் உள் ஒதுக்கீடு கேட்கிறது. தீவிரமாக போராட்டங்களை முன்னெடுக்கிறது. சீட் பேரத்துக்காக பாமக அப்படி செய்வதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
அதனால் தேர்தல் வரும் நேரத்தில் அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறுகின்றனர் என்பதே நிதர்சனம்.
newstm.in