
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரத்தில் அதிமுக சார்பில் வரும் 28ஆம் தேதி மிக பிரமாண்டமான முறையில் மாநாடு நடைபெற உள்ளது.
கூட்டத்தில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்ட நிலையில், தொகுதி பங்கீடு விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது.
மேலும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அதிமுக கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரும் பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மாநாடு பணிகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மேற்கொண்டு வருகிறார். இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான மக்களை திரட்ட அதிமுக பணிகளை செய்து வருகிறது.
newstm.in