பிரிலியன்ட் ஸ்க்ரீன்ப்ளே..பாராட்டு மழையில் திரிஷ்யம் 2..ரீமேக் செய்வாரா கமல்? எகிறும் எதிர்பார்ப்பு!

|

சென்னை: திரிஷ்யம் 2 திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நிலையில் படத்தை பாராட்டி தள்ளி வருகின்றனர் ரசிகர்கள்.

ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து 2013ஆம் ஆண்டு மலையாள மொழியில் திரைக்கு வந்த படம் திரிஷ்யம்.

எதிர்பாராத திருப்பங்களையும் டிவிஸ்ட்டுகளையும் கொண்ட இப்படம் ஒட்டு மொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தது.

கமல் – கவுதமி

மேலும் தமிழ், இந்தி, தெலுங்கு என மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. மலையாளத்தை போலவே மற்ற மொழிகளிலும் வசூலை குவித்தது. தமிழில் ரீமேக் செய்யப்பட்ட திரிஷ்யம் படத்தில் கமல்ஹாசன் மற்றும் கவுதமி லீடிங் ரோலில் நடித்தனர்.

அமேசான் ப்ரைம்

அமேசான் ப்ரைம்

இந்தப்படம் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. தற்போது திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

இதில் மோகன்லால், மீனா, அன்சிபா, எஸ்தர் அனில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள திரிஷ்யம் 2 அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.

சிறப்பான சீக்வல்

சிறப்பான சீக்வல்

படத்தை பார்த்த ரசிகர்கள் ஜித்து ஜோசப்பின் படைப்பையும் மோகன் லாலின் நடிப்பையும் பாராட்டி தள்ளுகின்றனர். படத்தை பார்த்த இந்த நெட்டிசன், திரிஷ்யம் 2 பார்த்தேன். ஃபென்டாஸ்டிக் படம். திரிஷ்யம் படத்தின் சிறப்பான தொடர்ச்சி என்று பாராட்டியுள்ளார்.

தியேட்டரில் பார்க்க முடியவில்லை

தியேட்டரில் பார்க்க முடியவில்லை

திரிஷ்யம் 2 படத்தை பார்த்த இந்த நெட்டிசன், திரிஷ்யம் 2வில் ஜார்ஜ்குட்டி.. மெண்டல் மாஸ் கேரக்டரைஸேஷன்.. ஜித்துவின் கடைசி ஒரு மணி நேரம் லூப்.. இந்த அரக்கணை தியேட்டரில் பார்க்க முடியவில்லையே.. என்று ஃபீல் பண்ணி பதிவிட்டுள்ளார்.

அதிர்ச்சியுடன் வருவார்

அதிர்ச்சியுடன் வருவார்

மலையாள சினிமா தொற்று நோய் காலத்திலும் முன்னோக்கி செல்கிறது. பிரைம் வீடியோ திரிஷ்யம் 2 படத்தின் மூலம் மீண்டும் தனது எதிராளியை பிட் செய்து விட்டது. ஜித்து ஜோசப் மீண்டும் ஒரு அதிர்ச்சியுடன் வருவார் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

மிஸ் பண்ணிடாதீங்க..

மிஸ் பண்ணிடாதீங்க..

திரிஷ்யம் 2 தீயாய் இருக்கு.. மோகன் லாலுக்கு 60 வயது என்று நம்ப முடியாது. ஜித்து ஜோசப்பின் பிரிலியன்ட் ஸ்க்ரீன்ப்ளே.. வொர்த்.. மிஸ் பண்ணிடாதீங்க.. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

கமல் நடிப்பாரா?

கமல் நடிப்பாரா?

இதனிடையே திரிஷ்யம் முதல் பாகத்தின் ரீமேக்கான பாபநாசத்தில் நடித்த நடிகர் கமல், திரிஷ்யம் 2வில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. படம் தொடர்பான விமர்சனங்கள் பட்டையை கிளப்பி வரும் நிலையில், முதல் பாகத்தில் நடித்த கமலே இரண்டாம் பாகத்தில் தொடர வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அரசியலில் பிஸி..

அரசியலில் பிஸி..

ஆனால் அரசியலில் பிஸியாக உள்ள கமல், சட்டசபை தேர்தல் நெருங்குவதால் திரிஷ்யம் 2 ரீமேக்கில் நடிப்பது சந்தேகம் என்றும் அப்படியே நடிப்பதாக இருந்தாலும் இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான் ஆகிய படங்களை முடித்த பிறகாகதான் இருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.