புற்று நோயாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்படாது


புற்று நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்படாது என அபேக்சா புற்று நோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் வசந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புற்று நோய் வைத்தியசாலையில் கடயைமாற்றி வரும் 2000 பணியாளர்களுக்கு இந்த கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பாரியளவிலான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை.

தடுப்பூசி தொடர்பில் பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், இந்த வதந்திகளை மக்கள் நம்பக்கூடாது.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடமிருந்து நோய்த் தொற்று பரவாது எனவும், பின்னர் நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

மதுபானம் அருந்தும் மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும் எனவும் அவர்களும் மனிதர்களே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் பின்னர் மதுபானம் அருந்துவோர் மற்றும் புகைப்பிடிப்பவர்கள் அவற்றை சில காலத்திற்குத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.