கியூபத் தூதுவர் திருமதி. ஜுவானா எலெனா ராமோஸ் ரொட்ரிகஸ் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை வெளிநாட்டு அமைச்சில் வைத்து நேற்று சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பைப் பேணுதல் குறித்து இரு தரப்பினரும் விரிவாகக் கலந்துரையாடினர்.