தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 11,813 காலிப்பணியிடங்களிக்கு கிரேட் 2 காவலர்களை தேர்வுச் செய்யும் சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு முடிவுகள் வெளியானது. சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் 11,813 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் கடந்த டிசம்பர் 13 அன்று தேர்வு நடத்தியது. இதில் மொத்தம் 5 லட்சத்து 50 ஆயிரத்து 314 பேர் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வில் தற்போது 1:5 என்ற முறையில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
காவலர் தேர்வில் பங்கேற்றவர்களின் பதிவெண்கள் www.tnusrbonline.org – இல் பிடிஎஃப் வடிவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேர்ச்சிப்பெற்ற காவலர்கள் அடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் அளவு சோதனை, பின்னர் 1500 மீட்டரை 7 நிமிடத்தில் கடக்கும் சகிப்புத்தன்மை சோதனை பின்னர் கயிறு ஏறுதல், 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல் போட்டி நடக்கும்.
இதில் தேறியவர்கள் பின்னர் மருத்துவ சோதனைக்குப்பின் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வானவர்களுக்கு கடிதம் அனுப்பப்படும்.