மோட்டோ இ7 பவர் இந்தியாவில் எச்டி ப்ளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 10 ஆதரவு உள்ளிட்ட அம்சங்களோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோரோலா இசீரிஸ் பதிப்பு
மோட்டோரோலா இசீரிஸ் பதிப்பில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் ஆகும். இந்தியாவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போனின் 2ஜிபி ரேம், 32 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.7,799 ஆகவும் 4ஜிபி ரேம் 64 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.8,299 ஆகவும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டாஹிட்டி ப்ளூ மற்றும் கோரல் ரெட் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன்
மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் பிப்ரவரி 26 ஆம் தேதி மதியம் 12 மணிமுதல் கிடைக்கு்ம என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எச்டி ப்ளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு வரும் எனவும் கூறப்படுகிறது.

மோட்டோ இ7 பவர் சிறப்பம்சங்கள்
மோட்டோ இ7 பவர் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் மேக்ஸ் விஷன் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே, 1600×720 பிக்சல்கள் தீர்மானம் தெளிவுத்திறன், மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது.

முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா
இதில் 1டிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இருக்கிறது. கேமரா அம்சத்தை பொறுத்தவரை இதில் இரட்டை கேமரா அமைப்பு இருக்கிறது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா ஆகியவை இருக்கிறது. எல்இடி பிளாஷ் உடன் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு
மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருக்கிறது. இதில் 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு, 5000 எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது. ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.