கலை பண்பாட்டை வளர்ப்பதற்காகவும், தொன்மையான கலை வடிவங்களை பேணிக்காக்கவும், பல்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும்,  கலைமணி கலைமாமணி விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள்  அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் கலை பண்பாட்டை வளர்ப்பதற்காகவும், தொன்மையான கலை வடிவங்களைப் பேணி காப்பதற்காகவும் பல்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.

தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் இயல், இசை, நாடக மன்றத்தால், 1959 ஆம் ஆண்டில் இருந்தே இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, சவுகார்ஜானகி, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் ராமராஜன், தயாரிப்பாளர் தாணு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட திரைபிரபலன்களுக்கு கலைமாமணி விருதை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதை தொடர்ந்து விருது பெற்ற கலைஞர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

மேலும் பாடகி ஜமுனா ராணி, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவ தர்ஷினி, சங்கீதா, டிவி நடிகைகள் நித்யா, சாந்தி வில்லியம்ஸ், டிவி நடிகர் நந்தகுமார் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இசையமைப்பாளர்கள் டி.இமான், தீணா, இயக்குநர்கள் கவுதம் மேனன், மனோஜ்குமார், ரவிமரியா, லியாகத் அலிகான், வசனகர்த்தா பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, நடன இயக்குநர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், சண்டைப்பயிற்சியாளர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது அறிவிக்கப்பட்டவர்கள் நாளை மாலை 5 மணிக்கு தலைமை செயலகம் வரவும் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.