அதிமுக- அமமுக இணைப்பு சாத்தியமா? – பாஜகவின் திட்டம் வெளிவந்ததால் பரபரப்பு !!

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்து பெங்களூரு சிறையில் சசிகலா ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.  

அதனையடுத்து, பிப்ரவரி 8ஆம் தேதி தமிழகத்துக்கு வந்தார் சசிகலா. அப்போது அவருக்கு அவரது ஆதரவாளர்கள் பெருவாரியான வரவேற்பு கொடுத்தனர். அப்போது முதலே அதிமுக – அமமுக இணைப்பு குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  அதேநேரத்தில் அதிமுக அதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. எனினும் பாஜக தரப்பில், அதிமுக – அமமுக இணைந்தால் தான் தேர்தலில் வெற்றிபெறமுடியும் என திட்டமிட்டு வருகிறது. 

இந்தநிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன், அமமுக தங்கள் கூட்டணியில் இடம்பெறுவது குறித்து பாஜக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போ அதிமுக – அமமுக இணைப்பை ஏற்படுத்த பாஜக முனைப்பு காட்டி வருவது என வெளியான தகவல் உறுதியானதாக கூறப்பட்டது.

இதனிடையே இந்தவிவகாரம் குறித்து பேசிய பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ப்பது குறித்து எங்கள் கூட்டணியின் மிகப் பெரிய கட்சியான அ.தி.மு.க தான் முடிவு செய்ய வேண்டும் என்று விளக்கம் அளித்தார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.