அரசு துறைகளில் மின்வாகனம்: நிதின் கட்கரி வலியுறுத்தல்| Dinamalar

புதுடில்லி: ”அரசுத் துறை வாகனங்கள் அனைத்தையும், மின் வாகனங்களாக மாற்ற வேண்டும்,” என, மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்திஉள்ளார்.

மின் வாகனங்கள் மற்றும் மின்சார, ‘சார்ஜ்’ மையங்கள் குறித்த, ‘கோ எலெக்ட்ரிக்’ விழிப்புணர்வு பிரசார விழா டில்லியில் நடந்தது.ஊக்குவிப்புஇதில், மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிதின் கட்கரி பேசியதாவது:பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதியை குறைக்கவும், எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும், மின்வாகன பயன்பாட்டை, மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. என் அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து துறைகளில் உள்ள வாகனங்களை, மின்சார வாகனங்களாக மாற்ற உத்தரவிடுவேன்.

அதுபோல, இதர அமைச்சகங்களும் உத்தரவிட வேண்டும். இறக்குமதி செய்யப்படும் எரிவாயுக்கு அரசு மானியம் வழங்குகிறது. அதை விட, மின்சார அடுப்பு சாதனங்களுக்கு மானியம் வழங்கினால், எரிவாயு இறக்குமதி செலவு குறையும். சமையல் எரிவாயு, விறகு ஆகியவற்றுக்கு ஆகும் செலவை விட, மின்சார அடுப்புகளை பயன்படுத்துவதற்கான செலவு குறைவாக இருக்கும்; மக்களும் பயன் அடைவர். ஒரு மின் வாகனம் வாயிலாக, மாதம், 30 ஆயிரம் ரூபாய் மிச்சம் பிடிக்கலாம்.


latest tamil news

இந்த வகையில், டில்லியில் மட்டும், 10 ஆயிரம் மின் வாகனங்கள் வாயிலாக, மாதம், 30 கோடி ரூபாய் மிச்சமாகும் என, கணக்கிடப்பட்டுள்ளது. மின் வாகன பயன்பாடு காரணமாக, சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.நடைமுறைஇவ்விழாவில், மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் பேசியதாவது:அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்திய சாலைகளில், மின்சார பஸ்களை மட்டுமே அனுமதிக்கும் கொள்கை குறித்து பரிசீலிக்கலாம். அதுபோல, நான்கு ஆண்டுகளில், மூன்று சக்கர மின் வாகனங்களின் பயன்பாட்டை நடைமுறைப்படுத்தலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.