ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 3 மாத இடைவெளியில் போட்டுக் கொண்டால் நல்ல பலன்! லான்செட் ஆய்வு தகவல்…

க்ஸ்போர்டு அஸ்ட்ஜெனெகா தடுப்பூசியை 3 மாத இடைவெளியில் போட்டுக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கிறது என்று பிரபல மருத்துவ ஆய்வு பித்திரிகையாக தி லான்செட் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவிலும், ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசி, கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி பயனர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அதுபோல, கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், கோவிஷீல்டு தடுப்பூசி மீது இந்தியமக்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது. இந்த தடுப்பூசியை மக்களுக்கு போடக்கூடாது என வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பிரபல மருத்துவ இதழான தி லான்சென்ட்,  ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு நற்சான்றிதழ் வழங்கி உள்ளது.  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் தால் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் பயன்பாட்டுக்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசியை 3 மாத இடைவெளியில் இரண்டு முறை போட்டுக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது என தெரிவித்து உள்ளது.

தற்போது உலகம் முழுவதும்  6 வார இடைவெளியுடன் இரண்டு டோஸ்கள்  போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்ட்ரூ பொல்லார்டு ஆய்வு ஒன்றை நடத்தினார். அதில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டதும்  3 மாதங்களுக்கு அது 76 சதவிகித பாதுகாப்பை அளிப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும்,  3 மாத இடைவெளிக்குப் பின்னர் இரண்டாவது டோசை போட்டால் போதும், அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதனால் பல நாடுகளில் அதிகமான மக்களுக்கு தடுப்பூசியை விரைவாக போட்டு முடிக்க முடியும் எனவும் தி லான்செட் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.