இன்று விற்பனைக்கு வரும் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன்: என்ன விலை? என்னென்ன சலுகைகள்.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்று மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனை விற்பனைக்கு கொண்டுவருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலை அமேசான், பிளிப்கார்ட், நோக்கியா வலைத்தளம் மூலம் வாங்க முடியும். இப்போது நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை பார்போம்.

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனின் விலை

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனின் விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனத்தை வாங்கும் பயனர்களுக்கு ஜியோ நிறுவனம் சார்பில் ரூ.4000 மதிப்புள்ள சலுகைகள் கிடைக்கும். அதேபோல் எப்-ஜார்டு, டஸ்க் மற்றும் சார்கோல் பிளாக் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும்.

720 x 1560 பிக்சல் தீர்மானம்

720 x 1560 பிக்சல் தீர்மானம்

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் ஆனது 6.3-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1560 பிக்சல் தீர்மானம், 19.5:9 திரைவிகிதம், 400 nits பிரைட்நஸ் உள்ளிட்ட பல்வேறு அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

20,000mAh பவர் பேங்க் பட்ஜெட் விலையில் அறிமுகம்.! முழு விவரம்.!

ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதி

ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதி

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் அட்ரினோ 610 ஜிபியு மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெம

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

13எம்பி பிரைமரி சென்சார்

13எம்பி பிரைமரி சென்சார்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

4000 எம்ஏஎச் பேட்டரி

4000 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

வைஃபை ஏசி, புளூடூத்,

மேலும் 4 ஜி ஆதரவு, வைஃபை ஏசி, புளூடூத், ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெறும் என

எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.