இளைஞர் அடித்துக் கொலை..ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வெறி செயல்! ஒருவர் கவலைக்கிடம் !

உத்தரபிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர் ரேஹான்(31). பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் தனது நண்பர் ஷாருக் என்பவருடன் சென்றபோது ஒரு குடியிருப்பு பகுதி அருகே சிறுநீர் கழித்துள்ளனர். அதனருகே உள்ள வீட்டில் வசித்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நந்தன் சிங் என்பவர் கால்நடை திருடர்கள் வந்துள்ளதாக சத்தம்போட்டுள்ளனர்.

இதனையடுத்து அக்கிராம  அனைவரும் ஒன்றுசேர்ந்து இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு சென்று அவர்களை மீட்டனர். மேலும் படுகாயம் அடைந்ததால் இருவரையும் டெல்லி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

எனினும் வழியிலேயே ரேஹான் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயத்துடன் போராடி வருகிறார். பின்னர்  நடந்த பிரேதப் பரிசோதனையில் ரேஹானின் தலையில் பலமாக தாக்கியதால் உட்காயம் ஏற்பட்டு அவர் இறந்ததாக தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனிடையே, ரேஹானின் மனைவி சேபா, தனது கணவரின் இறப்புக்கு காரணமான நந்தன் சிங் மீதும், ஊர்க்காரர்கள்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என போலீசில் புகார் அளித்தார். பின்னர் இது குறித்து விசாரணை நடத்தினர், 

அப்போது, ரேஹான் மற்றும் ஷாருக் இருவரும் திருடவந்ததாக கருதி அவர்களை அக்கிராம மக்கள் பலமாகத் தாக்கியதாக போலீசார் கூறுகின்றனர். மேலும் இருவரையும் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது என்றும், ஷாருக் கண்விழித்த பிறகே யார்யார் இந்த குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்பது தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இக்கொடூர அநாகரிக செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும்  கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.