உன்னாவ் வழக்கு: ஒருதலைக் காதல்.. தண்ணீரில் பூச்சி மருந்து.. திட்டம் போட்டு கொலை

உன்னாவ் வழக்கு: ஒருதலைக் காதல்.. தண்ணீரில் பூச்சி மருந்து.. திட்டம் போட்டு கொலை

|

உன்னாவ்: ஒருதலைக் காதலை ஏற்க மறுத்ததால், தண்ணீரில் விஷம் வைத்து சிறுமிகளை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இப்போதெல்லாம், உன்னாவ் என்ற பெயரைக் கேட்டாலே பக்கென்று இருக்கிறது. பாலியல் பலாத்காரமும், வன்முறையும் அதிகம் நிகழும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் கால்நடைத் தீவனம் சேகரிக்கச் என்ற 2 தலித் சிறுமிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இன்னொரு சிறுமி உயிருக்குப் போராடி வருகிறார். 3 சிறுமிகளுக்கும் விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முதல்கட்ட தகவல்களின் படி, புல் அறுக்க சென்ற 3 சிறுமிகளும் விஷம் குடித்ததற்கான அறிகுறி தெரிவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கில் 6 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், சிறுமிகளுக்கு விஷம் வைத்து கொன்றதாக வினய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் அளித்த வாக்குமூலங்கள் போலீசாரை அதிர வைத்துள்ளது.

தண்ணீரில் பூச்சி மருந்து

விசாரணையில், தற்போது உயிருக்கு போராடி வரும் சிறுமியை, ஒருதலையாக காதலித்து வந்த வினய், அதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் விஷம் வைத்ததாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிகிச்சை பெற்று வரும் சிறுமியை கொலை செய்யும் நோக்கில், தண்ணீரில் பூச்சிக் கொல்லி மருந்தை வினய் கலந்ததாகவும், ஆனால் எதிர்பாராதவிதமாக அச்சிறுமியுடன் சேர்ந்து வந்த மற்ற இரு சிறுமிகளும் தண்ணீரை குடித்து பலியாகி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

 காதலை ஏற்க மறுப்பு

காதலை ஏற்க மறுப்பு

லக்னோ பகுதியின் ஆய்வாளர் லக்ஷ்மி சிங் கூறுகையில், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த வினய், ஊரடங்கு நேரத்தில் இந்த மூன்று சிறுமிகளுடன் பழகியுள்ளான். மூவரும் அடிக்கடி வயல்களில் சந்தித்து பேசுவது, சாப்பிடுவது என்று மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். சில சந்திப்புகளுக்கு பிறகு, ஒரு சிறுமியை வினய் ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். அப்போது அந்த சிறுமியிடம் காதலை தெரிவிக்க, அதை அவர் ஏற்க மறுத்திருக்கிறார்.

 தண்ணீர் பாட்டிலில் பூச்சிக் கொல்லி

தண்ணீர் பாட்டிலில் பூச்சிக் கொல்லி

இதனால் ஆத்திரமடைந்த வினய், திட்டம் போட்டு அந்த சிறுமியை கொல்ல திட்டம் தீட்டியிருக்கிறான். இதற்காக தனது வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை அவன் பயன்படுத்தி இருக்கிறான். இதற்காக, தண்ணீர் பாட்டிலில் பூச்சிக் கொல்லி மருந்தை கலந்து, சிறிது ஸ்நாக்ஸ் உடன் எடுத்துக் கொண்டு, அவர்களை காண சென்றிருக்கிறான். அதேசமயம், அந்த சிறுமிகளும் சில தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு வினய்-யை பார்க்க வயலுக்கு சென்றுள்ளனர்.

 நுரை தள்ள..

நுரை தள்ள..

அப்போது, தான் காதலித்த சிறுமிக்கு, பூச்சிக் கொல்லி கலக்கப்பட்ட தண்ணீரை அவன் கொடுத்துள்ளான். அவர் அதை பருக தொடங்கிய சில வினாடிகளில், தண்ணீரைப் பறித்த மற்ற இரு சிறுமிகளும் தாகம் தணிய அதை குடித்திருக்கின்றனர். இதை வினய் எதிர்பார்க்கவில்லை. சிறிது நேரத்தில் மூன்று பெண்களும், வாயில் நுரை தள்ளி கீழே விழ, சப்தம் போடாமல் அங்கிருந்து அவன் தப்பித்துவிட்டான். விசாரணையில், சம்பவ இடத்தில் சிகரெட் துண்டுகளும், காலி தண்ணீர் பாட்டில்களும் இருந்ததை கண்டறிந்த போலீஸார், வினய் மீது சந்தேகம் அடைந்துள்ளனர்.

 தூக்கு தண்டனை

தூக்கு தண்டனை

பின், சம்பவம் நடந்த நேரத்தில் வினய் மொபைல் சிக்னல் எங்கு இருந்தது என்பதை ஆராய, அது கச்சிதமாக அதே வயல்வெளியை காட்டிக் கொடுக்க, வினய்யை கைது செய்து, பிறகு முறையாக விசாரிக்க, அவன் அனைத்தையும் ஒப்பித்துள்ளான். குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள அச்சிறுமிகளின் குடும்பத்தார், குற்றவாளியை தாமதமின்றி தூக்கிலிட வேண்டும் என்று கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.