ஏற்பாடு; மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேனுஷன்களிலும் தனி அறை

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேனுஷன்களிலும் தனி அறை ஒதுக்கப்பட்டு, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு பெற்றோருடனோ, காப்பாளருடனோ குழந்தைகள் வரும் சூழல் நிலவுகிறது. வரும் குழந்தைகள் மன ரீதியாக பாதிக்கப்படாமல் இருக்க, தங்கள் வீட்டில் இருப்பது போன்ற பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தவும், மகிழ்ச்சியாக விளையாடும் வகையிலும் ‘சைல்ட் பிரண்ட்லி கார்னர்’ என்ற பெயரில் சிறுவர் விளையாட்டு அறைகள் அமைக்கப்படுகிறது.திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இதற்காக அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களிலும் தனி அறை அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.

சிறுவர் விளையாட்டு அறையில் குழந்தைகளுக்கு பிடித்த கார்டூன் உட்பட பல வண்ண ஓவியங்கள் வரையப்படுகின்றன. விளையாட்டு உபகரணங்களும் வாங்கப்பட்டு உள்ளன. குழந்தைகள் அமர்ந்து புத்தகம் படிக்க, விளையாட குட்டி பிளாஸ்டிக் சேர்களும் இடம் பெற்றுள்ளன. இனி ஸ்டேஷனுக்கு வரும் குழந்தைகள் அச்சமின்றி தங்களின் வீடு மற்றும் பள்ளிகளில் இருப்பது போன்று குதுாகலமாக விளையாடலம் என, போலீசார் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.