கருங்கல், ஜல்லி, மணல், வண்டல் ஆகியவற்றை எடுப்பதற்கு கனிம வளத்துறை மூலம் அனுமதி

கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதியில் கருங்கல், ஜல்லி, மணல், வண்டல் ஆகியவற்றை எடுப்பதற்கு கனிம வளத்துறை மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.

அனுமதி சீட்டு மூலம் கிடைக்கும் தொகையில் குறிப்பிட்ட சதவீதம் கணக்கிட்டு ஊராட்சிகளுக்கு வழங்கப்படும். பல ஆயிரம் முதல் சில லட்சங்கள் வரை கிடைக்கும் கனிம வள நிதி அந்தந்த ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.பிரித்து வழங்க வில்லை:கடந்த 4 ஆண்டுகளாக கனிம வளத்துறை மூலம் கல், மணல் வண்டல் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி சீட்டு மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய் தொகை ஊராட்சிகளுக்கு பிரித்து வழங்கப்படவில்லை. ஆண்டிபட்டி ஒன்றியத்தில் திம்மரசநாயக்கனுார், டி.சுப்புலாபுரம், டி.ராஜகோபாலன்பட்டி, அனுப்பபட்டி, கோயில்பட்டி, எஸ்.எஸ்.புரம், குன்னுார், திருமலாபுரம், மரிக்குண்டு ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் குவாரிகள் தற்போதும் செயல்படுகிறது. இதே நிலைதான் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளிலும் உள்ளது.

நிதி நெருக்கடி:ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்ததாவது: மாநில நிதிக்குழு மானியம் அந்தந்த மாதம் கிடைக்காததால் கிராம ஊராட்சிகள் நிதி நெருக்கடியால் திணறி வருகிறது. இதனால் சில மாதமாக ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு பராமரிப்பு தொடர்வதில் சிரமம் ஏற்படுகிறது. கனிம வள நிதி கிடைத்தால் கிராம ஊராட்சிகளில் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்ய முடியும். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.