கருத்துச்சுதந்திரம் அமைதிப்போராட்டம்: எந்த ஜனநாயகத்திலும் அடிப்படையானது

ஸ்டாக்ஹோம், பிப். 20–

கருத்து சுதந்திரம், அமைதிப் போராட்டம் ஆகியவை எந்த ஜனநாயகத்திலும் அடிப்படையான மனித உரிமைகள் என்று கிரேட்டா தன்பெர்க் கூறி உள்ளார்.

ஸ்வீடனைச் சேர்ந்த பருவநிலை செயல்பாட்டாளர் கிரேட்டர் தன்பெர்க், டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தனது டுவிட்டர் பக்கத்தில் டூல்கிட் லிங்க் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது சர்ச்சையான நிலையில், பெங்களூரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி, மும்பையை சேர்ந்த நிகிதா ஜேக்கப் அவரது கூட்டாளி ஷாந்தனு ஆகியோர் உருவாக்கியதாக டெல்லி போலீசார் குற்றம் சாட்டி கைது செய்தனர்.

மீண்டும் வலியுறுத்தல்

நேற்று திஷா ரவியின் போலீஸ் காவல் முடிவுக்கு வந்ததையடுத்து, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரசு வழக்கறிஞர் கூறுகையில், 22ஆம் தேதி ஷாந்தனு மற்றும் திஷாவை நேருக்கு நேர் வைத்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் அவரை 3 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்ட உரிமை ஆகியவை, எந்தவொரு ஜனநாயகத்திலும் அய்யத்திற்கிடமில்லாத, அடிப்படை ஜனநாயக உரிமை என்பதை மறுக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.