காரில் ரூ.10 லட்சம் கோகைன் வைத்திருந்த… பாஜக மாநில இளைஞரணி பெண் தலைவர் அதிரடி கைது!

காரில் ரூ.10 லட்சம் கோகைன் வைத்திருந்த… பாஜக மாநில இளைஞரணி பெண் தலைவர் அதிரடி கைது!

|

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில பாஜக இளைஞர் அணி தலைவர் பமீலா கோஸ்வாமியை காரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை வைத்து இருந்ததாக போலீசார் கைது செய்தனர்.

இந்த போதைமருந்து எங்கு வாங்கப்பட்டது? யாருக்கும் கொடுக்கப்பட உள்ளது? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

பமீலா கோஸ்வாமி விமான பணிப்பெண்ணாக பணியாற்றினார். டெலிவிஷன் தொடரிலும் நடித்து வந்தார்.இவர் 2019-ல் பாஜகவில் இணைந்தார்.

கோகைன் போதைப்பொருள்

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக இளைஞர் அணி தலைவராக இருப்பவர் பமீலா கோஸ்வாமி. இவர் தனது காரில் போதைப்பொருள் கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தெற்கு கொல்கத்தாவின் நியூ அலிபூரில் காரை சோதனை செய்தபோது 100 கிராம் எடையுள்ள ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பாஜக இளைஞர் அணி தலைவர் கைது

பாஜக இளைஞர் அணி தலைவர் கைது

இதனை தொடர்ந்து பமீலா கோஸ்வாமி (23), அவரது நண்பர் பிரபீர் குமார் டே (38), சோம்நாத் சாட்டர்ஜி (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பமீலா கோஸ்வாமி காரில் இருந்து சட்டவிரோதமான போதைப்பொருளை பறிமுதல் செய்தோம். இந்த போதைமருந்து எங்கு வாங்கப்பட்டது? யாருக்கும் கொடுக்கப்பட உள்ளது? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

திரிணாமுல் கடும் தாக்கு

திரிணாமுல் கடும் தாக்கு

கைதான பமீலா கோஸ்வாமி உள்ளிட்டோர் மீது என்.டி.பி.எஸ் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.போதைப்பொருளுடன் பாஜக இளைஞர் அணி தலைவர் கைது செய்யப்பட்டு இருப்பது மேற்கு வங்க அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது என்று திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த சவுகித ராய் கூறினார். குழந்தை கடத்தல் வழக்குகளில் பாஜகவினர் ஈடுபட்டது முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது .போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

சட்டம் கடைமயை செய்யும்

சட்டம் கடைமயை செய்யும்

சமீபத்தில் திரிணாமுல் கட்சியில் இருந்து விலகிய பாஜக தலைவர் ராஜீவ் பானர்ஜி, “இந்த சம்பவம் குறித்து எனக்கு அதிகம் தெரியாது. யாராவது சட்டவிரோதமாக செய்கிறார்கள் என்றால் அந்த நபர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதைப் பொருட்படுத்தாமல் சட்டம் அதன் கடைமையை செய்ய வேண்டும் என்று கூறினார்.

யார் இந்த பமீலா கோஸ்வாமி?

யார் இந்த பமீலா கோஸ்வாமி?

பமீலா கோஸ்வாமி விமான பணிப்பெண்ணாக பணியாற்றினார். டெலிவிஷன் தொடரிலும் நடித்து வந்தார். சமூக சேவையாளரும் அரசியல்வாதியுமான பமீலா கோஸ்வாமி கடந்த 2019-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.கோஸ்வாமி மிகவும் சுறுசுறுடன் கட்சி பணியாற்றினார். இளம் வாக்காளர்களை மிகவும் கவர்ந்தார். மாநிலத்தில் பாஜக மேற்கொள்ளும் பேரணிகளின் படங்களை அவர் தொடர்ந்து பேஸ்புக், டுவிட்டர் சமூக ஊடகங்களில் பதிவேற்றி வந்தார். பாஜக தலைவர்களான முகுல் ராய் மற்றும் பாஜக இளைஞர் அணி த தேசியத் தலைவர் தேஜஷ்வி சூர்யா ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கோஸ்வாமி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

பாடகி ரியானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்

பாடகி ரியானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவிடத்தில் நடைபெற்ற ‘பராக்ரம் திவாஸ்’ கொண்டாட்டத்திலும் கோஸ்வாமி கலந்து கொண்டார். மேலும் வேளாண் சட்டத்துக்கு எதிராக, விசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அமெரிக்க பாப் பாடகி ரியானாவின் கருத்துக்கு பமீலா கோஸ்வாமி பதிலடி கொடுத்தார். போதுமான தகவல்களும் அறிவும் இல்லாமல் இந்திய விவகாரங்கள் குறித்து பேசுவதை தவிருங்கள். உண்மையான விவசாயிகள் இதற்கு வெட்கப்படுகிறார்கள் என்று கோஸ்வாமி, ரியானாவுக்கு ரீ-டுவிட் செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.