சாம்பார் சாதம் சாப்பிட்ட போலீஸ், அவரது மனைவி உயிரிழப்பு!

சென்னையை அடுத்த ஆவடியில் சாம்பார் சாதம் சாப்பிட்ட மத்திய ரிசர்வ் படை போலீஸ், அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ஏட்டாக பணியாற்றி வந்த வர்க்கீஸ் (53), அவரது மனைவி ஜெர்சம்மாள்(51) தம்பதிக்கு அமிர்தஜான்(24), ஆஸ்பி (21) என்று இரண்டு பிள்ளைகள்.

வர்க்கீஸ் தனது மனைவி, மகனுடன் வீட்டில் காய்கறிகளுடன் சாம்பார் சாதம் சாப்பிட்டுள்ளார். அவர்களது மகள் உடல் நலக்குறைவால் சாம்பார் சாதம் சாப்பிடவில்லை.

இதனையடுத்து வர்க்கீஸ், அவரது மனைவி, மகன் ஆகிய மூவரும் வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர். அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வர்க்கீஸ் முதலில் உயிரிழந்தார்.

அவரைத் தொடர்ந்து ஜெர்சம்மாளும் பலியானார். அவர்களது மகனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  இச்சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உணவில் நச்சுத்தன்மை ஏற்பட்டு வர்கீஸ், ஜெர்ஸம்மாள் இறந்தார்களா அல்லது இருவரும் விஷம் வைத்து கொல்லப்பட்டனரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.