தடுக்கலாமே ; ஆற்றுபடுகைகளில் தொடர் மண் திருட்டு கட்சியினர் கூட்டணி அமைத்து அமோகம்

ராஜபாளையம் ; அரசுகள் ,விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து சலுகைகள், உதவிகள் வழங்கி வரும் நிலையில் மாவட்டத்தில் ஆற்றுபடுகை ,விவசாய நிலங்களில் கட்சியினர் கூட்டணி அமைத்து மண், மணல் கொள்ளையில் ஈடுபட்டுவருவது தொடர்கிறது.

வீடுகள் கட்டுவது போன்ற கட்டுமான பணிகளின் போது மட்டுமே நாம் மணலை பற்றி எண்ணுகிறோம். மற்றபடி மீதி நேரங்கில் அதை பற்றிசிந்திப்பதில்லை. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது ஆறுகளையும் அதன் வளங்களையும் நினைத்து வேதனைபடும் நாம் மழை வந்ததும் மறந்து விடுகிறோம். மணல் வளமானது மேற்கு தொடர்ச்சி மலை சரிவில் உற்பத்தியாகும் ஆறுகளின் மூலம் தொடர்ந்து கிடைத்து வந்தது. ஒரு கன அடி மணல் உருவாக குறைந்தபட்சம் 100 ஆண்டுக்கு மேல் ஆகும். கட்டுமானத்திற்கு சிறிய அளவில் எடுக்கப்பட்டபோது அதன் பாதிப்பு தெரியவில்லை.

தற்போது மணல் எடுப்பதில் இயந்திரங்களை பயன்படுத்துவதால் மணல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. அரசு அதிகாரிகளின் ஆதரவுடன் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மேலாக ஆறுகளில் மணல் அள்ளப்படுவது நீராதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க நீதி மன்றம் தலையிட்ட நிலையிலும் மணல் மாபியாக்களால் கொள்ளையும் தொடர்கிறது. சேத்துார், தேவதானம் ஆற்றுப்பகுதிகளில் டூ வீலர்களில் மணல் கொள்ளை நின்ற பாடில்லை. தேவதானம் மற்றும் சொக்கனாதன்புத்துார் பகுதிகளில் பட்டா நிலங்களில் மண்அள்ளும் இயந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் மண் அள்ளி செல்வதும், ஆற்று பகுதிகளில் மணல் திருட்டும் சர்வ சாதாரணமாய் நடந்து வருகிறது. சாஸ்தா கோயில் செல்லும் விவசாய நிலங்களில் இரவு பகலாக மண் அள்ளும் பணி நடந்து வருகிறது. இதனால் புதிய ரோடுகள் சேதமாகி வருவதுடன் குடிநீர் சப்ளை குழாய்களிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளன. இது போன்ற கடத்தலுக்கு அரசியல் கட்சியினர் சிலர் கூட்டணி அமைத்து செயல்படுகின்றனர்………..

.கண்ணெதிரே விபரீதம்இயற்கை வளங்கள் கொள்ளை போவதால் நீர் மட்டம் குறைந்து சுற்றுச்சூழல் பாதிக்கிறது. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கை கோர்த்து இந்த விதி மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 200 டிப்பர் லாரிகள் சவடு மண் என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் இயற்கை வளத்தை அள்ளி செல்கின்றனர். எதிர்ப்புகளை தெரிவித்ததால் மாற்றுப்பாதையான அசையாமணி ரோட்டில் லாரிகளை திருப்பி விட்டுள்ளனர். கண்ணெதிரே நடைபெறும் விபரீதத்தை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து தடுக்க வேண்டும்.அம்மையப்பன், சமூக ஆர்வலர், தேவதானம்…………………..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.