தனுஷ் இந்தி படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..

நடிகர் தனுஷ் கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் சென்று இப்போது ஹாலிவுட்டையும் தொட்டிருக்கிறார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. திறமையாளர்களுக்கு எங்கும் இடம் உண்டு என்பதை ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து பல ஹீரோக்கள் நிரூபித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் தனுஷ். ஆரம்பக் கட்டத்தில் தனுஷெல்லாம் ஒரு நடிகரா என்று விமர்சித்த வாய்கள் இன்று அவரது அபார வளர்ச்சி கண்டு வாயடைத்துப்போய் உள்ளனர். யாரைப்பார்த்தும் காப்பி அடிக்காமல் தனக்கென ஒரு நடிப்பு பணியை வகுத்துக் கொண்டு அதில் வெற்றி பெற்று இன்றைக்கு ஹாலிவுட்டிலிருந்து அழைப்பு வரும் அளவுக்குத் தனது வேகத்தைக் காட்டி இருக்கிறார்.

ஏற்கனவே தி எக்டார்டினரி ஜர்னி ஆஃப் தி ப்க்ரி என்ற ஹாலிவுட் படத் தில் நடித்த தனுஷ் தற்போது தி அவெஞ்சர்ஸ் இயக்குனர் கள் இயக்கும் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். அதற்கான படப் பிடிப்புக்காக விரைவில் 2 மாதம் அமெரிக்க செல்லவிருக்கிறார்.இதற்கிடையில் தனுஷ் இந்தியில் அட்ரங்கி ரே என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோரும் நடிக்கிறார்கள்.2013 ஆம் ஆண்டில் ‘ராஞ்சனா’ படத்தில் நடித்திருந்தார் தனுஷ் தற்போது அவர் இந்தியில் 2 வது படம் நடிக்கிறார். இரண்டு படங்களையும் ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். இந்த படம் 2021 ஆகஸ்ட் 6 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

‘அட்ரங்கி ரே’ கதையை ஹிமான்ஷு சர்மா எழுதியுள்ளார், மேலும் இதில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். பாலிவுட் காதல் நாடகத்தில் தனுஷ், அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அட்ரங்கி ரே 2020 மார்ச் மாதம் வாரணாசியில் தொடங்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை முடித்தார். இதன் படப்பிடிப்பு வாரணாசி மற்றும் மதுரையிலும் நடந்துள்ளது. கடைசியாக டெல்லி மற்றும் ஆக்ராவில் தாஜ்மஹாலில் படமாக்கப்பட்டது. முகலாய பேரரசர் ஷாஜகான் உடையணிந்து, தாஜ் முன் நிற்கும் அக்‌ஷய் குமாரின் புகைப்படங்கள் டிசம்பர் மாத தொடக்கத்தில் வைரலாகின. இதற்கிடையில், ருசோ சகோதரர்கள் இயக்கிய தனது ஹாலிவுட் படமான ‘தி கிரேமேன்’ படப்பிடிப்பிற்காக தனுஷ் சமீபத்தில் அமெரிக்கா சென்றார்.

https://tamil.thesubeditor.com/news/cinema/29513-dhanush-s-bollywood-film-atrangi-re-release-date-announced.html

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.