
திண்டுக்கலில் தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மூடப்பட்ட பள்ளிகள் சமீபத்தில் தான் திறக்கப்பட்டன. முதலில் 12, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.
இம்மாதம் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடந்து வருகிறது. இதனிடையே திண்டுக்கல், சேலம், பழனி, சென்னை உள்ளிட்ட இடங்களில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், திண்டுக்கலில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவிகள் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
newstm.in