பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் 6வது கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில், புதிதாக யூனியன் பிரதேச அந்தஸ்து பெற்ற லடாக்கின் துணைநிலை ஆளுநர் முதன்முறையாக பங்கேற்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு லடாக் யூனியன் பிரதேசமாக உருவானபின் முதல்முறையாக நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரும் மாநில அந்தஸ்திலிருந்து மாறி யூனியன் பிரதேச அந்தஸ்துடன் பங்கேற்கிறது.
இன்றைய கூட்டத்தில் தமிழகம் சார்பில் முதல்வர் பழனிசாமி கலந்துகொள்கிறார். மேலும், கூட்டத்தில், வேளாண் திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தித் திறன், மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்டக் குழு இயங்கி வந்தது. ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன், பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் திட்டக்குழு கலைக்கப்பட்டது.
அதற்குப் பதிலாக ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பு கொண்டு வரப்பட்டது. இந்த அமைப்பே தற்போது அரசுக் கொள்கைகளை வகுக்கும் அமைப்பாக இயங்கி வருகிறது.
இன்றைய நிதிஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.