திருப்பூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பலூன்களை பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். விழுப்புரத்தில் எரிபொருட்கள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை நடத்தி வருகின்றனர்.
