பேண்டுக்கு மேலே பேண்டா… டாப்ஸியின் அசத்தலான காஸ்டியூம்!

|

மும்பை : எதையும் வித்தியாசமாக செய்யும் நடிகை டாப்ஸி இப்பொழுது பேண்டுக்கு மேலே மற்றொரு பேண்ட் இருக்க சூப்பரான காஸ்டியூம் ஒன்றை அணிந்துள்ளார்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை திரைப்படங்களின் வாயிலாக குரல் கொடுத்து வரும் டாப்ஸி இப்பொழுது ரஷ்மி ராக்கெட் என்ற அத்லெடிக் படத்தில் நடித்து வருகிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் பெரும்பாலும் நடிக்கும் டாப்ஸி பேண்ட்க்கு மேல பேண்ட் இருக்கின்ற மாதிரி வித்தியாசமான காஸ்ட்யூமில் முன்னழகை திறந்து விட்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள போட்டோஷுட் புகைப்படங்கள் வைரலாகிறது.

ஜனகனமன

ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை தொடர்ந்து ஜெயம் ரவி மீண்டும் இயக்குனர் லக்ஷ்மன் உடன் இணைந்து பூமி படத்தில் நடித்திருக்க அந்த படம் சமீபத்தில் பொங்கலுக்கு வெளியாகியது. கலவையான விமர்சனங்களுடன் பூமி திரைப்படம் வெளியாகியது அதைத் தொடர்ந்து ஜனகனமன என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அதில் டாப்ஸி பண்ணு நடிக்கிறார். தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த டாப்சி இப்போது பாலிவுட்டில் கலக்கி வர படங்களில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

ஸ்போர்ட்ஸ் படத்தில்

ஸ்போர்ட்ஸ் படத்தில்

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கதைகள் பாலிவுட்டில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வர டாப்ஸி இப்பொழுது ரஷ்மி ராக்கெட் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இதுவரை க்யூட்டான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த டாப்ஸி இந்த படத்தில் நடிகர்கள் ரேஞ்சுக்கு உடம்பை தாறுமாறாக ஏற்றி நரம்புகள் புடைக்க உடற்பயிற்சி செய்து நிஜ ஸ்போர்ட்ஸ் பிலேயரை போலவே தன்னை தானே அர்ப்பணித்துள்ளார்.

வித்தியாசமான காஸ்ட்யூமில்

வித்தியாசமான காஸ்ட்யூமில்

பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த ரஷ்மி ராக்கெட் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த இந்நிலையில் இந்த படத்தில் நந்தா பெரியசாமி எழுத்தாளராக பணியாற்றியுள்ளார் இவர் தமிழில் ஒரு கல்லூரியின் கதை படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர். மேலும் சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இருக்கும் டாப்ஸி இப்பொழுது வித்தியாசமான காஸ்ட்யூமில் அசத்தலான போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

முன்னழகு தெரிய அசத்தலாக

முன்னழகு தெரிய அசத்தலாக

மலைகளுக்கு நடுவே வீட்டின் மொட்டை மாடியில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்துக்கொண்டு நிற்க பார்க்க வித்தியாசமான காஸ்ட்யூமில் தொண்ணூறுகளில் ஃபேமஸாக இருந்த பெல்ஸ் பேண்ட் போன்று அணிந்துகொண்டு பார்க்கவே பேண்டுக்கு மேல பேண்ட் இருக்கின்றது போல மேல் சட்டையை திறந்துவிட்டபடி முன்னழகு தெரிய அசத்தலாக ஸ்டைலிஷாகவும் இருக்கும் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் அனைவரையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.