மக்களே எச்சரிக்கை !! அதிகளவில் பரவி வரும் உருமாறிய கொரோனா; விஞ்ஞானிகள் எச்சரிக்கை

இந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் சில பகுதிகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் அமைந்த செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியியல் மையம் சார்பில் கொரோனா சம்பந்தமான பல்வேறு வகைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இந்தியாவில் அவை எப்படி பரவின என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கைகளாக வெளியிடப்பட்டன. இந்தியாவில் பரவியிருக்கும் கொரோனா சுமார் 5000ற்கும் மேற்பட்ட வைரசின் வகைகளை பற்றியும்,பெருந்தொற்று காலத்தில் அவை எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பது பற்றியும் முழுமையான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விடுத்த செய்திக்குறிப்பில் புதிய வகை கொரோனா வைரசுகள் உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி அச்சுறுத்தலாக உள்ளன.  அடையாளம் காணப்பட்ட அந்த வகை வைரசுகள் இந்தியாவில் குறைந்த அளவிலேயே பரவியுள்ளன.

போதிய அளவு அவற்றின் தொடர்ச்சியை கண்டறியாமல் விட்டதும் இந்தியாவில் குறைந்த பரவலுக்கு காரணம்.  இந்த வைரசுகள் மற்றும் பிற புதிய வகை வைரசுகளின் ஜீனோம்களின் தொடர்ச்சியை வரிசைப்படுத்தி நாடு முழுவதும் துல்லியமுடன் அடையாளம் காண வேண்டிய அவசரம் ஏற்பட்டு உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார். 

தென்மாநிலங்களில் என்440கே என்ற வைரசானது அதிக அளவில் பரவி வருகின்றன என்பதற்கான சான்றுகள் வெளிவந்துள்ளன.  அவற்றின் பரவல் பற்றி முறையாக புரிந்து கொள்வதற்கு நெருங்கிய கண்காணிப்பு அவசியம்.  துல்லியமாக அத்துடன்  சரியான தருணத்தில், உருமாறிய புதிய வகை வைரசுகளை கண்டறிவதும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததே.   அடுத்தடுத்து பேரிடர் நிகழாமல் தடுப்பதற்கு அது அவசியம் உதவி புரியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.