இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஹெலினா, துருவஸ்திரா ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டுள்ளதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஹெலினா, துருவஸ்திரா என்ற இரண்டு ஏவுகணைகளை தயாரித்தது. எதிரிகளின் கவச வாகனங்களை தகர்க்கும் வகையில், எந்த நேரத்திலும், எந்த வானிலையிலும் செயல்படும் வகையில் இந்த இரண்டு இரண்டு ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டது.
ஹெலினா ஏவுகணை ராணுவ பயன்பாட்டிற்காகவும், துருவஸ்திரா ஏவுகணை விமானப்படையின் பயன்பாட்டிற்காகவும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இரண்டு ஏவுகணைகளின் சோதனை ராஜஸ்தானில் உள்ள பாலைவன பகுதியில் நடைபெற்றது.
அதில் இரண்டு ஏவுகணைகளும் குறுகிய தூர இலக்கு, நீண்ட தூர இலக்கு, நிலையான இலக்கு, சுழன்று கொண்டிருக்கும் இலக்கு என எல்லாவற்றிலும் வெற்றிகரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in