வாரிசை களமிறக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி? எந்த தொகுதி தெரியுமா?

ஹைலைட்ஸ்:

கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டும் கிருஷ்ணசாமியின் மகன்
ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஷ்யாம் கிருஷ்ணசாமி மக்களை சந்திப்பார்
ஷ்யாம் போட்டியிட அதிக வாய்ப்பு!

வாரிசு அரசியலை இந்த கட்சி செய்கிறது என இந்த காலத்தில் எந்த கட்சியையும் சுட்டிக்காட்ட முடியாது. அந்த அளவுக்கு அனைத்துக் கட்சியிலும் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை வாரிசு அரசியல் தொடர்கிறது.

அந்த வகையில்
புதிய தமிழகம்
கிருஷ்ணசாமியும் தனது வாரிசை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் மாவட்டங்களில் தேவேந்திர குல சமூக மக்கள் அடர்த்தியாக இருக்கும் சில தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் கை ஓங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

விஜயகாந்த், பிரேமலதா போட்டியிடும் தொகுதிகள் இவை தான்? பின்னணி தகவல்!

1996 முதல் கிருஷ்ணசாமிக்கு நெருக்கமான தொகுதியாக இருக்கும்
ஓட்டப்பிடாரம்
தொகுதியில் இந்த சட்டமன்றத் தேர்தலில் அவரது மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்டம் தோறும் புதிய தமிழகம் கட்சி சார்பில் அரசியல் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில் கிருஷ்ணசாமியுடன் அவரது மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமியும் மேடையில் அருகருகே அமர்ந்திருந்தார்.

கூட்டத்தில் பேசிய அவர் ஓட்டப்பிடாரம் தொகுதி குறித்தும் அதோடு தனது தந்தை கிருஷ்ணசாமிக்கு இருக்கும் நெருக்கம் குறித்தும் ஷ்யாம் பேசினார். மேலும் அதிமுக, திமுக இரு கட்சிகளையும் விமர்சித்து பேசினார்.

சைலண்ட் மோட் சசிகலா, உறங்கிப் போன ஸ்லீப்பர் செல்கள்! பின்னணி என்ன?

தேவேந்திரகுல வேளாளர்கள் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்படுவது மட்டுமல்லாமல் பட்டியல் வெளியேற்றமே நிரந்தர தீர்வு என வலியுறுத்தினார்.

டாக்டர் கிருஷ்ணசாமி
பேசும் போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு நான் ஒவ்வொரு கிராமமாக வர வாய்ப்பு இல்லாவிட்டாலும் தம்பி ஷ்யாம் வருவார் என்று கூறினார். இதனால் ஓட்டப்பிடாரத்தில் ஷ்யாம் களமிறங்குவது உறுதி என்கிறார்கள் புதிய தமிழகம் கட்சி வட்டாரத்தில்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.