இசையோடு இணைஞ்சிட்டாங்க போல.. புதிய காதலருடன் ஜோடி போட்டு சுத்தும் ஸ்ருதிஹாசன்.. வைரலாகும் வீடியோ!

By Mari S

|

சென்னை: தனது புதிய காதலருடன் மியூசிக் ஸ்டூடியோவில் ஃபன் பண்ணும் போட்டோக்களை நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளை மும்பையில் கொண்டாடினார்.

நடிகை தமன்னா உள்ளிட்ட சிலர் நேரில் அந்த பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டனர்.

பலூன்களுடன் பர்த்டே

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதியினரின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் கடந்த மாதம் ஜனவரி 28ம் தேதி தனது 35வது பிறந்தநாளை மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்கள் சூழ கோலாகலமாக கொண்டாடினார். கருப்பு மற்றும் கிரே நிற பலூன்களுடன், சில சாக்லேட் கேக்குகளை கட் செய்து தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

கட்டிப்பிடித்து நெருக்கமாக

கட்டிப்பிடித்து நெருக்கமாக

ஸ்ருதிஹாசனின் பிறந்தநாள் விழா புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதில், அனைவரையும் அதிர செய்த புகைப்படம் என்றால், ஆண் நண்பர் ஒருவருடன் இறுக்கமாக கட்டிப்பிடித்து பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ருதிஹாசனின் புகைப்படம் தான். இவர் தான் ஸ்ருதியின் புதிய காதலரா? யார் இவர் என ரசிகர்களை தேட வைத்தது.

டூடுல் ஆர்டிஸ்ட்

டூடுல் ஆர்டிஸ்ட்

டூடுல் வடிவமைப்பாளரான சாந்தனு ஹசாரிகா தான் நடிகை ஸ்ருதிஹாசனின் புதிய காதலர் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அவர், “ஹேப்பி பர்த்டே லவ்” என்றும் அதற்கு பதிலாக ஸ்ருதி, என் பிறந்தநாளை சந்தோஷமாக மாற்றியதற்கு நன்றி என அவருடன் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

ஸ்டூடியோவில் ரொமான்ஸ்

ஸ்டூடியோவில் ரொமான்ஸ்

இந்நிலையில், தற்போது மீண்டும் மும்பையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் சாந்தனு ஹசாரிகா இணைந்து பணியாற்றும் சில வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஸ்ருதிஹாசன் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார். என்ன மேடம் ஸ்டூடியோவிலேயே ரொமான்ஸா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

எக்ஸ் லைஃப்

எக்ஸ் லைஃப்

அமேசான் பிரைமில் வெளியான புத்தம் புது காலை ஆந்தாலஜியில் நடித்த நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள பிட்ட கதலு ஆந்தாலஜியில் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான எக்ஸ் லைஃப் கதையில் புரட்சிப் பெண்ணாக நடித்து அசத்தியுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிட்ட கதலு வெளியானது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பிசி

மீண்டும் பிசி

முன்னாள் காதலர் மைக்கேல் கோர்சலேவுடன் பிரேக்கப் ஆன நிலையில், சுமார் 2 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஸ்ருதிஹாசன், மீண்டும் சினிமாவில் செம பிசி நடிகையாக கலக்கி வருகிறார். பொங்கலுக்கு டோலிவுட்டில் வெளியான கிராக் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், பிரபாஸின் சலார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய்சேதுபதியுடன் ஸ்ருதி நடித்துள்ள லாபம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.