இதை காட்டினால் 1 லட்சம் ரூபாய் பரிசு, அமைச்சர் ஜெயக்குமாரின் திடீர் அறிவிப்பு

ஹைலைட்ஸ்:

கலைஞருக்கு ஆதாயம் இல்லை என்றால் திட்டத்தை ரத்து செய்வார்.
டிவி நல்ல முறையில் இருந்தால் ஒரு லட்சம் பரிசு தருகிறேன்.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் மாறி மாறி நலத்திட்டங்களை எடுத்துரைத்தும், விமர்சனம் செய்தும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்து வரும் நல திட்டங்களையும், சலுகைகளையும் திமுக தலைவர்
ஸ்டாலின்
விமர்சித்து வருகிறார். ஸ்டாலினின் விமர்சனத்துக்கு அதிமுக
அமைச்சர் ஜெயக்குமார்
எதிர்வினையாற்றி வருவதும், தனது பாணியில் கலாய்த்து வருவதும் அனைவரும் அறிந்ததே.

இந்த சூழலில் இன்றைய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வண்ண தொலைக்காட்சி பெட்டியை குறித்து விமர்சித்தார். அதாவது, அதிமுக அரசு கொடுத்துள்ள இலவச மிக்சியையும், கிரைண்டரையும் பொதுமக்கள் இன்னமும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வண்ண தொலைக்காட்சி பெட்டி சில ஆண்டுகளிலேயே பழுதடைந்து விட்டது.

யாராவது திமுக கொடுத்த தொலைக்காட்சி பெட்டி ரிப்பேர் ஆகவில்லை என்று கூற சொல்லுங்கள். அவருக்கு ஒரு லட்ச ருபாய் பரிசளிக்கிறேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

கமலின் கோரிக்கையை ஒரே நாளில் செயல்படுத்திய தமிழக அரசு..! நன்றி கூறிய ஹாசன்

கடந்த 2006 ஆம் ஆண்டில் மறைந்த முதல்வர் கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. அப்போது, திமுக அறிவித்திருந்த திட்டத்தில் ஒன்றுதான் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்குவது. அதன்படி தமிழக மக்களுக்கு ஒரு ரேஷன் கார்டுக்கு இலவச டிவி கொடுக்கப்பட்டது. அதனை மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2016 தேர்தல் பிரச்சாரத்தில் விமர்சித்திருந்தார்.

அதாவது, கருணாநிதி தேர்தல் முன்பாக நிறைய திட்டங்களை அறிவிப்பார். பின்னர் ஆட்சியில் அமர்ந்ததும் தனக்கும், தனது மகனுக்கும் அதனால் என்ன ஆதாயம் என்று யோசிப்பார். ஒருவேளை ஆதாயம் இல்லையென்றால் அந்த திட்டத்தை ரத்து செய்துவிடுவார். அதுபோலத்தான், வண்ண தொலைக்காட்சி பெட்டியும். மக்கள் அனைவரும் இலவசமாக 21 இன்ச் டிவி வழங்கப்படும் என்றுதான் நினைத்திருந்தனர். காரணம், அப்போது புழக்கத்தில் இருந்தது 21 இன்ச் வண்ண தொலைக்காட்சி பெட்டிதான். ஆனால், கலைஞர் 14 இன்ச் டிவி கொடுத்து விட்டு மக்களை ஏமாற்றிவிட்டார் என இவ்வாறு விமர்சித்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.