இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்கும் பணிகளை விரைவுப்படுத்துவதற்கு டெல்கோ நிறுவனம் பாரதி ஏர்டெல் குவால்காம் டெக்னாலஜிஸ் உடன் கூட்டு சேர்ந்துள்ளதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் 5ஜி சேவை
ஏர்டெல் நெட்வொர்க் மெய்நிகராக்கப்பட்ட மற்றும் ஒபன் ரேன் அடிப்படையிலான 5ஜி நெட்வொர்க்குகளை வழங்க குவால்காம் எஸ்ஜி ரேன் தளங்களை பயன்படுத்த உள்ளது. 0-ரேன் உடனான இந்த கட்டமைப்பு சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் 5ஜி நெட்வொர்க் பயன்படுத்துவதில் அதிபர்களாக மாற இது வழிவகுக்கும் என நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் மற்றும் குவால்காம் டெக்னாலஜிஸ்
ஏர்டெல் மற்றும் குவால்காம் டெக்னாலஜிஸ் 5ஜி வயர்லெஸ் அணுகல் உள்ளிட்ட பல பயன்பாடுகளை செயல்படுத்த ஒத்துழைக்கும் எனவும் இது ஜிகாபிட் அடிப்படையில் பிராட்பேண்ட் இணைப்பை வீடுகளுக்கும் வணிகங்களுக்கும் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக 5ஜி சேவை வழங்க தயார்
இரு நிறுவனங்களின் நோக்கம் இந்தியா முழுவதும் விரைவான பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் சிடிஓ ரன்தீப் செகோன் கூறுகையில், ஏர்டெல் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தின் முன்னோடியாக இருந்து வருகிறது. எங்களது நெட்வொர்க் 5ஜி சேவை முழுமையாக வழங்க தயாராக உள்ளது. குவால்காம் டெக்னாலஜி மற்றும் ஏர்டெல் ஒருங்கிணைந்த சேவை மூலம் அதிவேக டிஜிட்டல் சகாப்தத்தை இந்தியாவில் கொண்டு வருவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி சேவை சோதனை
கடந்த மாதம் 5ஜி வணிக ரீதியாக சோதனை செய்த நாட்டின் முதல் ஆபரேட்டராக ஏர்டெல் திகழ்ந்தது. ஏர்டெல் தனது 1800 மெகா ஹெர்ட்ஸ் தாராளமயமாக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் பேண்ட் மூலம் ஹைதராபாத்தில் நேரடி 5 ஜி சேவைகளைச் சோதனை செய்து அதன் ஆற்றலை நிரூபித்தது.

ஏர்டெல்லின் புதிய 5 ஜி சேவையின் கீழ் பயனர்கள் பெரிய திரைப்படங்களை சில நொடிகளில் பதிவிறக்கம் செய்யலாம் என டெல்கோ தெரிவித்தது. ஏர்டெல் 4 ஜி மற்றும் 5 ஜி இரண்டையும் ஒரே ஸ்பெக்ட்ரம் தொகுதியில் ஒரே நேரத்தில் ஏர்டெல் இயக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாரதி ஏர்டெல் தனது 5ஜி நெட்வொர்க் இப்போது பயன்பாட்டிற்குத் தயார் என்று கூறியது.