கோவிட்-19: வென்டிலேட்டரில் இருந்த போதே இறந்த 62 சதவிகிதம் பேர் – ஷாக் ரிப்போர்ட்

கோவிட்-19: வென்டிலேட்டரில் இருந்த போதே இறந்த 62 சதவிகிதம் பேர் – ஷாக் ரிப்போர்ட்

|

ஹரியானா: கோவிட் -19 காரணமாக இறந்த 62 சதவீத நோயாளிகள், இறக்கும் தருவாயில் வென்டிலேட்டரில் இருந்துள்ளனர் என்ற புள்ளிவிவரம் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், கேரளா, பஞ்சாப், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது.

குறிப்பாக கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 2,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மருத்துவமனைகளில் 5,514 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

60 ப்ளஸ்

இந்நிலையில், ஹரியானாவில் கோவிட் -19 காரணமாக இறந்த 62 சதவீத நோயாளிகள் இறக்கும் தருவாயில் வென்டிலேட்டரில் இருந்துள்ளது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது, அதே நேரத்தில் 20 சதவீதம் பேர் இறக்கும் போது ஆக்ஸிஜன் சப்போர்ட்டில் இருந்துள்ளனர். மேலும், ஹரியானாவில் கோவிட் -19 இறப்புகளில் 64 சதவீதம் பேர், 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வயதுடையவர்கள் என்று தெரியவந்துள்ளது. பிப்ரவரி 21 வரை ஹரியானாவில் 3,042 கோவிட் -19 இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் மாநிலத்தில் கோவிட் இறப்பு எதுவும் பதிவாகவில்லை.

நீரிழிவு

நீரிழிவு

மாநில சுகாதார சேவைகள் இயக்குநரகம் தொகுத்த தரவுகளின்படி, இறக்கும் போது 48 சதவீத நோயாளிகளுக்கு (1,458) உடம்பில் வேறு சில நோய்களும் இருந்தது, அதே நேரத்தில் 17 சதவீதம் (516 நோயாளிகள்) பேருக்கும் எந்த குறைபாடுகளும் இல்லை. 12 சதவிகித பேருக்கு இறக்கும் போது நீரிழிவு நோய் இருந்தது கண்டறியப்பட்டது, அதன்பிறகு உயர் இரத்த அழுத்தம் மற்றும் சுவாச நோய் (தலா நான்கு சதவீதம்), இதய நோய் (மூன்று சதவீதம்) , சிறுநீரக நோய், புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய் (தலா இரண்டு சதவீதம்) மற்றும் நரம்பியல் கோளாறுகள் ஒரு சதவீதம் (16 நோயாளிகள்) என்று இறக்கும் போது இந்த நோய்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

 விவசாயிகள் எவ்வளவு தெரியுமா?

விவசாயிகள் எவ்வளவு தெரியுமா?

இறக்கும் போது நோயாளிகளின் நிலையைப் பொருத்தவரை, 62 சதவீதம் (அல்லது 1,896) வென்டிலேட்டரிலும், 20 சதவீதம் (589 நோயாளிகள்) ஆக்ஸிஜன் ஆதரவிலும், 12 சதவீதம் (368 நோயாளிகள்) Bilevel Positive Airway Pressure (BiPAP) ஆதரவில் இருந்துள்ளனர். நோயாளிகளின் வயது மற்றும் தொழில் விவரங்களில், 64 சதவீதம் (1,948 நோயாளிகள்) மூத்த குடிமக்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், 14 சதவீதம் பேர் (437 நோயாளிகள்) தனியார் வேலை / தொழிலில் உள்ளனர் என்றும், 10 சதவீதம் பேர் (295 நோயாளிகள்) இல்லத்தரசிகள், ஐந்து சதவீதம் (166 நோயாளிகள்) வேலை இல்லாதவர்கள், மூன்று சதவீதம் (80 நோயாளிகள்) தொழிலாளர்கள் / விவசாயிகள் என்றும் தெரியவந்துள்ளது.

குழந்தைகள்

குழந்தைகள்

இவர்களைத் தவிர, இரண்டு சதவீதம் (66 நோயாளிகள்) அரசு ஊழியர்கள் (சுகாதாரப் பணியாளர்கள் தவிர), ஒரு சதவீதம் (14 நோயாளிகள்) சுகாதாரப் பணியாளர்கள், ஒரு சதவீதம் (21 நோயாளிகள்) மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 12 பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.