கோவையில் நாளை நடக்கும் பிரதமர் பொதுக்கூட்டத்துக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு: டிரோன் மூலம் கண்காணிப்பு

கோவை: கோவை பீளமேடு ெகாடிசியா வளாகத்தில் நாளை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டத்துக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாளை காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி சென்னைக்கு காலை 10.25 மணிக்கு வந்தடைவார். பின்னர் அவர், ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்று அங்கு பல்வேறு விழாக்களில் பங்கேற்க உள்ளார். பின்னர் அவர், மதியம் 2.10 மணிக்கு சென்னை சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு 3.35 மணிக்கு வருகிறார். ேகாவை கொடிசியா அரங்கத்தில் நெய்வேலி லிக்னைட் நிறுவனம், குடிநீர் வாரியம், நகராட்சி நிர்வாகம், மத்திய கப்பல் போக்குவரத்து துறை, மின்வாரிய திட்டங்களை துவக்கி வைத்து பேச உள்ளார்.  இதைத்தொடர்ந்து, மாலை 5 மணிக்கு கொடிசியா மைதானத்தில் நடக்கும் பா.ஜ. பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.  பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை நகருக்கு சீல் வைத்து போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.  டி.ஜி.பி அமரேஷ் புஜாரி தலைமையில் 17 எஸ்.பி.க்கள், 38 கூடுதல் எஸ்.பி.க்கள், 48 டி.எஸ்.பி.க்கள், உதவி கமிஷனர்கள் உட்பட 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.  பிரதமர் அலுவலகத்தின் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி) கமாண்டோக்கள் 30 பேர் கோவை வந்துள்ளனர். குண்டு துளைக்காத 4 கார்களும் வரவழைக்கப்பட்டுள்ளது.  கொடிசியா வட்டாரத்தில் போலீசார் அவ்வப்ேபாது டிரோன் மூலம் கண்காணிப்பு பணி நடத்தி வருகின்றனர்.புதுச்சேரியில்: சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி லாஸ்பேட்டை வருகிறார். அங்கிருந்து காரில் ஜிப்மர் வளாகத்தில் உள்ள அப்துல்கலாம் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் க பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார். ரூ.2426 கோடி செலவில் விழுப்புரம்- நாகை இடையேயான 4 வழிச்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ. 491 கோடி செலவில் காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனை கிளை பணிகளை துவக்கி வைக்கிறார். சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடி செலவில் புதுச்சேரி துறைமுக விரிவாக்கப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.இதன்மூலம் சென்னை- புதுச்சேரி இடையே சிறிய ரக சரக்கு கப்பல் சேவை துவங்கும். அதேபோல் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ரூ. 7 கோடி செலவில் 400 மீட்டர் செயற்கை ஓடுதள பாத அமைக்கும் திட்டத்தை துவக்கி வைக்கிறார். லாஸ்பேட்டையில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கை வசதிகள் கொண்ட மகளிர் விடுதியை திறந்து வைக்கவுள்ளார்.ரூ.14.83 கோடி செலவில் கடற்கரையில் பிரெஞ்சு காலத்தில் இருந்த மேரி கட்டிடம், அதே முறையில் புதுப்பிக்கப்பட்டதையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். புதுச்சேரியிலும் சுய சார்பு இந்திய திட்டத்தை துவக்கி வைக்கிறார். மீண்டும் காரில் லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் 12 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றுகிறார். அவரது வருகையையொட்டி மைதானம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.