செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் வீடியோ- ஆடியோவை வெளியிட்ட நாசா

வாஷிங்டன்
2020 ஆம் ஆண்டு  ஜூலை 30 ஆம் தேதி நாசா விஞ்ஞானிகள் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பினர். இந்த விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில், நாசா அனுப்பிய பெர்சவரனஸ் ரோவர் விண்கலம் 7 மாத பயணங்களுக்கு பின்னர் வெற்றிகரமாக செவ்வாய்கிரகத்தை அடைந்த நிலையில், அதன் சுற்றுவட்டபாதையில் சுற்றி வந்தது.  பின்னர் விண்கலத்தில் இருந்து ரோபோட்டிக் ரோவர், இந்திய நேரப்படி 18-ஆம் தேதி   அதிகாலை 2 மணியளவில் ஜெசிரோ பள்ளத்தில் தரையிறங்கியது. 

செவ்வாய்கிரகத்தில்  வெற்றிகரமாக இறங்கிய பின்னர் செவ்வாய் கிரகத்தின் நம்பமுடியாத முதல் படங்களை பெர்சவரன்ஸ் ரோவர்  எடுத்து அனுப்பியது.
பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய போது பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோவை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.
 பெர்சவரன்ஸ் ரோவர் கிரகத்தை நோக்கி இறக்கப்பட்ட வீடியோ மற்றும் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் பதிவு செய்த வீடியோ மற்றும் ஆடியோவை நாசா இன்று அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தவரலாற்று சிறப்பு மிக்க வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.