பெட்ரோலியம் பொருட்களை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என தமது அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக பெட்ரோலியம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மத்திய மாநில அரசுகளின் மறைமுக வரிகள் மற்றும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது.
பிராண்டட் அல்லாத பெட்ரோல் விலை நாட்டின் சில இடங்களில் அது 100 ரூபாயை தொட்டு விட்டது. டீசலின் விலை 90 ரூபாயை நெருங்குகிறது. இது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள தர்மேந்திர பிரதான், பெட்ரோலியம் பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால், அவற்றின் விலை குறையும் என்று தெரிவித்துள்ளார்.