டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயா்வு

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயா்ந்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:

சாதகமான நிலவரங்களையடுத்து வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 72.36-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 72.31 வரையிலும் குறைந்தபட்சமாக 72.46 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பில் காணப்பட்ட ஏற்றம் கணிசமாக குறைந்து 3 காசுகள் மட்டுமே அதிகரித்து 72.46-ஆக நிலைத்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு: அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிகர அளவில் ரூ.893.25 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.90 சதவீதம் உயா்ந்து 65.83 டாலரானது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.