|
சென்னை : நடிகை சிருஷ்டி டாங்கே ட்ரெடிஷ்னல் காஸ்ட்யூமில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
விஷாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான சக்ரா திரைப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருக்கும் இவருக்கு அடுத்த கட்டில் என்ற படம் வைட்டிங்கில் உள்ளது.
சமீப காலமாக சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் சிருஷ்டி டாங்கே விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் எப்பொழுது ட்ரெடிஷ்னல் லுக்கில் மெல்லிய இடையை காட்டி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.
அதிகமாக கவனிக்கப்பட்டார்
காதலாகி,யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை சிருஷ்டி டாங்கே அதை தொடர்ந்து தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கத் தொடங்கினார். இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருந்த ஜிவி பிரகாஷ் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட டார்லிங் திரைப்படத்தில் சிருஷ்டி அதிகமாக ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.

பிரம்மாண்ட திரைப்படங்களில்
கொழுக் மொழுக் தேகத்தில் கன்னக்குழி அழகி ரசிகர்களை கட்டி இழுக்கும் நடிகை சிருஷ்டி டாங்கே இளம் நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் அதேசமயம் முன்னணி நடிகர்களின் பிரம்மாண்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பது என்றாலும் ஓகே என்று சொல்லி நடித்து வருகிறாராம்.

விஷாலின் சக்ரா
அந்தவகையில் விஷாலின் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட சக்ரா படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது திரையரங்கில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் நிலையில் அதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்க அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.

ட்ரெடிஷனல் லூக்கில்
லாக்டவுனில் படுகவர்ச்சியான போட்டோ ஷூட்களை எடுக்க தொடங்கியது நடிகை சிருஷ்டி டாங்கே அதில் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வர இப்பொழுது நல்ல பொண்ணு மோடுக்கு மாறி ட்ரெடிஷ்னல் லூக்கில் பார்க்கப் பார்க்க திகட்டாத கொள்ளை அழகில் இருக்கும் கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.