தடுமாறும் தங்கம் விலை.. நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திரும் போலிருக்கே..!

தங்கம் விலையானது நேற்று பலத்த ஏற்றம் கண்ட நிலையில், இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இரண்டிலும் பெரிய மாற்றம் காணவில்லை.

முந்தைய அமர்வில் 10 கிராமுக்கு 700 ரூபாய் அதிகரித்த நிலையில், வெள்ளியின் விலையும் சுமார் கிலோவுக்கு 1500 ரூபாய் அதிகரித்தது. இதே கடந்த வாரத்த்தில் 2% வீழ்ச்சி கண்டது.

தங்கம் விலையானது அமெரிக்காவின் ஊக்கத்தொகை அறிவிப்புகளுக்கு மத்தியில், பணவீக்க அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் தங்கம் விலையானது, ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

இன்று வாங்கலாமா?

தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், இன்று சற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் தங்கத்தினை வாங்கலாமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் தினசரி கேண்டில் பேட்டர்னில், தங்கம் விலையானது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது தற்போது சற்று தடுமாற்றத்தில் இருந்தாலும், ஏற்றம் காண வாய்ப்புகள் அதிகம்.

தங்கம் பாதுகாப்பு புகலிடம்

தங்கம் பாதுகாப்பு புகலிடம்

தங்கம் என்றாலே இன்றளவிலும் பாதுகாப்பு புகலிடமாக இருக்கும் ஒரு கவர்ச்சிகரமான முதலீடாக உள்ளது. அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்தாலும், பணவீக்கம் அதிகரிக்கலாம் என்ற நிலையும் இருந்து வருகிறது. இதனால் தங்கத்தில் மீண்டும் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. அதோடு குறைந்த தங்கம் விலையும் பல முதலீட்டாளர்களை வாங்க தூண்டியுள்ளது. ஆக இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.

சர்வதேச பொருளாதாரம்

சர்வதேச பொருளாதாரம்

கொரோவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பல்வேறு ஊக்க நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி பாதையினை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. ஆக இது அந்தந்த நாட்டின் நாணயங்களை ஊக்குவிக்கலாம். குறிப்பாக அமெரிக்கா டாலரின் மதிப்பு வலுவடைந்து வரும் நிலையில், பணவீக்கம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

காமெக்ஸ் தங்கம் விலை
 

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று காலையில் சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. எனினும் தற்போது அவுன்ஸூக்கு 1.25 டாலர்கள் குறைந்து, 1807.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலையானது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாக தொடங்கியிருந்தாலும், நேற்றைய உச்சத்தினை உடைத்துக் காட்டியுள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது தற்போது 0.47% அதிகரித்து, 27.945 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாக தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளியின் விலை தற்போது சற்று குறைந்தாலும், மீண்டும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து, 46,871 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இது இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தையிலும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 322 ரூபாய் குறைந்து, 70,110 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக அதிகரித்து தொடங்கியுள்ளது. ஆக இது வெள்ளியும் இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

தங்க ஆபரண விலை

தங்க ஆபரண விலை

சென்னையில் இன்று தங்கம் ஆபரணத்தின் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து, 4,428 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 35,424 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. தொடர்ச்சியாக இன்றோடு கடந்த 4 அமர்வுகளாகவே ஏற்றம் கண்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய ( 24 கேரட்) தங்கத்தின் விலையினை பொறுத்தவரையில், இன்று கிராமுக்கு 54 ரூபாய் அதிகரித்து, 4,830 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 432 ரூபாய் அதிகரித்து 38,640 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவும் இன்றோடு 4 வர்த்தக தினங்களாக ஏற்றம் கண்டு வருகிறது.

இன்று தங்கம் வாங்கலாமா?

இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கல் என்பது சிறந்த ஆதரவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.