அமேசான் வலைத்தளத்தில் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் Amazon Fab Phones Fest Sale எனும் தலைப்பில் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது அமேசான் நிறுவனம். மேலும் இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் நிறுவனம்
அமேசான் நிறுவனம் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. குறிப்பாக தள்ளுபடி மட்டுமின்றி வட்டியில்லா மாத தவணை வசதி, எக்சேன்ஜ் ஆஃபர், உடனடி தள்ளுபடி, வங்கி சலுகை என பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அமேசான் நடத்தும் இந்த சிறப்பு விற்பனை வரும் பிப்ரவரி 25-ம் தேதி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 8 ப்ரோ 5ஜி
இந்த சிறப்பு விற்பனiயில் மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.47,999-விலையில் வாங்க முடியும். மேலும் இதில் ரூ.4000 தள்ளுபடி கூப்பன், தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.3000 உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 9 பவர்
அமேசான் நடத்தும் இந்த சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை ரூ.10,499-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,99-ஆக இருந்தது.

சிறப்பு விற்பனை
அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனை ரூ.22,999-விலையில் வாங்க முடியும். மேலும் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனை ரூ.36,999-விலையிலும், ஐபோன் 12 மினி மாடலை ரூ.64,900-விலையிலும் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனங்களை வாங்கும் பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

ஒப்போ ஏ31
Amazon Fab Phones Fest விற்பனையில் ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனை ரூ.11,990-விலையில் வாங்க முடியும். இந்த ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன் ரூ.14,990-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர ரூ.9,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் 9ஏ மாடல் இப்போது ரூ.7,999-க்கு வாங்க கிடைக்கிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.81,999-விலையில் வாங்க முடியும். பின்பு எம்ஐ 10டி ப்ரோ 5ஜி, எல்ஜி விங், கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா போன்ற சாதனங்களுக்கு சலுகைகள்அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 11 ப்ரோ
மேலும் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் எதிர்பார்த்த ஐபோன் 11 ப்ரோ மாடலின் விலை ரூ. ரூ.82,900-முதல் துவங்குகிறது. பின்பு இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.