|
சென்னை : ஒரே கண்ணசைவில் அனைவரையும் கட்டிப்போட்ட பிரியா வாரியரின் மற்றுமொரு பாடல் இணையத்தை கலக்கி டிரெண்டிங்கில் நம்பர் ஒன்னாக உள்ளது.
செக் திரைப்படத்தின் மூலம், தெலுங்கு சினிமாவில் முதன்முறையாக என்ட்ரி கொடுக்க உள்ளார் பிரியா வாரியர்.
சந்திர சேகர் யேலட்டி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் இம்மாதம் 26ந் தேதி திரைக்கு வர உள்ளது.
உலக புகழ்
மலையாள நடிகையான பிரியா வாரியர், ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை உயர்த்தியும், சுருக்கியும், கண் அடித்தும் உலகம் புகழ் பெற்றார். பருவப்பெண்ணாக இருந்த பிரியா வாரியர். அந்த படத்தில் பள்ளி மாணவியாகவே நடித்து இருந்தார். முத படமாக வெற்றி பெற்றதால் அவருக்கு மலையாள கரையோரத்தில் ஏகப்பட்ட மவுசு.

ஹைலைட்டே
அவர் காட்டிய முகபாவத்தில் சொக்கிப்போன ரசிகர்களின் பேராதரவால், ஒரே நாளில் பல லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றார். அந்த பெண்ணுக்கு ஹைலைட்டே அந்த கண்ணுதான்பா என்று அனைவரும் ரசித்து ரசித்து வியந்து பாராட்டும் அளவுக்கு உச்சம் பெற்றது அந்த கண்ணடி சில்மிஷம்.

சென்
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் இவர், தற்போது தெலுங்கில் தனது கால் தடத்தை பதித்துள்ளார். சந்திர சேகர் யேலட்டி இயக்கத்தில் உருவாகி வரும் செக் என்ற படத்தில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக பிரியா வாரியர் நடித்துள்ளார். பாவ்யா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு கல்யாணி மாலிக் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

டிரெண்டிங் சாங்
டீசர் வெளியாகி வைரலான நிலையில் இப்படத்தில் வரும் ஒரு பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. நிதின் மற்றும் பிரியா வாரியாரின் அழகான காதலை சொல்லும் வகையில் படமாக்கப்பட்டுள்ள “நின்னு சூடக்குண்ட” என்ற பாடல் வரிகள் அனைவரையும் கட்டிப்போட்டுள்ளது. வெளியான ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. முகத்தை வளைத்து நெளித்து பாவனை காட்ட நம்ம நாயகி பிரியா வாரியருக்கு சொல்லியாத் தரணும் இந்த பாட்டிலும் ஏகத்திற்கும் முகபாவனை காட்டி மிரட்டி உள்ளார்.

பிப்ரவரி 26 ரிலீஸ்
இப்படம் சிறையில் நடக்கும் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் பிப்ரவரி 26ந் தேதி திரையில் வெளியாக உள்ளது. இப்படம் பிரியா வாரியருக்கு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இவரின் ரசிகர்கள் தலைகால் புரியாமல் ஏகத்திற்கும் குஷியில் உள்ளனர். தமிழ் ரசிகர்கள் அவர் அவர் பங்கிற்கு கொஞ்சம் தமிழ் பக்கம்வாமா என கொஞ்சியும், கெஞ்சியும் கேட்டு வருகின்றனர்.