கிறிஸ் கெய்ல் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள்  தேசிய அணியில்

மேற்கிந்தியத் தீவுகள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கிரிஸ் கெயில், இந்நாட்டின் தேசிய அணியில் மீண்டும் இடம்பெறுவார் என  எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான ரி-20 போட்டிகளில் அவர் பங்கேற்கப்பார் என நம்பப்படுகிறது..

பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளில் பங்கேற்று வந்த அவர் திடீரென தாய்நாடு நோக்கிப் பயணமாகியுள்ளார்.

41 வயதான கிரிஸ் கெயில்இ தற்போதைய கிரிக்கெட் உலகில் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவராக திகழ்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.