பியாஜியோவின் மின்சார சரக்கு வாகனம் அறிமுகம்

சிறிய ரக வா்த்தக வாகனங்களை தயாரித்து வரும் பியாஜியோ நிறுவனம், ‘அபே இ-எக்ஸ்ட்ரா எஃப்எக்ஸ்’ என்ற மூன்று சக்கர மின்சார சரக்கு வாகனத்தை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதைத் தவிர, 2021-ஆம் ஆண்டுக்கான புதிய பதிப்பாக மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர பயணிகள் வாகனமான ‘அபே இ-சிட்டி’ ஆட்டோவையும் அந்த நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

பேட்ரியுடன் வெளிவந்துள்ள இவ்விரு மூன்று சக்கர வாகனங்களின் அறிமுக சலுகை விலை ரூ.3.12 லட்சம் மற்றும் ரூ.2.83 லட்சமாக (ஃபேம்-2 பிந்தைய மானியம்) நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக பியாஜியோ வா்த்தக வாகன நிறுவனத்தின் (பிவிபிஎல்) தலைவரும், நிா்வாக இயக்குநருமான டியகோ கிராபி தெரிவித்துள்ளாா்.

 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.