தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. இம்முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பல்வேறு வியூகங்களை வகுத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். அதிமுகவும் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் வேட்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு அமைச்சர் செல்லூர் ராஜு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஹிட்லர் ஆட்சியில் கூட தான் நடந்தது. கொரோனா காலத்திலும் முதலமைச்சர் ஓபிஎஸ் சிறப்பாக பணியாற்றினார் என பதட்டமாக கூறிவிட்டு, பின்னர் தடுமாறி இபிஎஸ் என மாற்றி கூறினர்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், ஒவ்வொரு மாவட்டமாக முதலமைச்சர் சென்று ஆய்வு நடத்தினார். இந்தியாவில் எந்த ஒரு முதலமைச்சரும் நேரிடையாக சென்று ஆய்வு பணிகளை செய்ததில்லை. தன் உரையும் துச்சமாக மதித்து பணியாற்றினார். மக்கள்தான் எஜமானர்கள், ஆகவே வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.