கொரோனா பாதிப்பை இயற்கை பேரிடராக கருதுங்கள்: மத்திய அரசுக்கு உத்தவ் தாக்கரே கடிதம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் முதல் அலையில் கூட இவ்வாறு அதிகரித்தது கிடையாது. இதனால் சில மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மகாராஷ்டிரா அரசு பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க … Read more கொரோனா பாதிப்பை இயற்கை பேரிடராக கருதுங்கள்: மத்திய அரசுக்கு உத்தவ் தாக்கரே கடிதம்

வேகமெடுக்கும் கொரோனா!: தடுப்பூசி போட்டுக்கொள்வதில் 12 மாநிலங்களுக்கு கீழே சென்ற தமிழ்நாடு..விழிப்புணர்வு ஏற்படுத்தாமையே காரணமா?

டெல்லி: கொரோனா தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் சத்தீஸ்கர்,  தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பது தெரியவந்திருக்கிறது. நாடு முழுவதும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் போடப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 11 கோடியே 10 லட்சம் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் நாட்டில் மொத்த தொகையில் 7 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். கடந்த … Read more வேகமெடுக்கும் கொரோனா!: தடுப்பூசி போட்டுக்கொள்வதில் 12 மாநிலங்களுக்கு கீழே சென்ற தமிழ்நாடு..விழிப்புணர்வு ஏற்படுத்தாமையே காரணமா?

திருப்பூரில் ஈமு கோழி வளர்ப்பு திட்டம் நடத்தி செய்தவருக்கு 10 ஆண்டு சிறை

திருப்பூர்: திருப்பூரில் ஈமு கோழி வளர்ப்பு திட்டம் நடத்தி ரூ.15 லட்சம் மோசடி செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரை சேர்ந்த ஈஸ்வரன்(41) என்பவருக்கு கோவை பொருளாதார குற்ற வழக்குகள் நீதிமன்றம் தண்டனை விதித்தது. தண்டனை பெற்ற ஈஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி உத்தரவிட்டுள்ளார். ரூ.1.5 லட்சம் கட்டினால் மாதம் ரூ.8,000 தரப்படும் என்று 2011ல் அறிவித்து ஈமு கோழி திட்டத்தை நடத்தி வந்துள்ளார்.

12 ஆண்டுகளுக்கு பின் முடி வெட்டிய குஜராத்தை சேர்ந்த இளம் பெண்!

காந்திநகர்: உலகின் நீளமான முடி உடைய இளம் பெண் என்ற சாதனை படைத்த குஜராத்தை சேர்ந்த நிலான்ஷி படேல் 12 ஆண்டுகளுக்கு பிறகு தனது முடியை வெட்டியுள்ளார். 6 வயதில் இருந்து முடியை வளர்த்து வருவதாகவும் தற்போது 18 வயதில் அதனை வெட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்: 24 மணி நேரமும் டாஸ்மாக் கடையில் மது விற்பனை – பொதுமக்கள் அவதி

காஞ்சிபுரத்தில் பெரிய காஞ்சிபுரம் மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே 24 மணி நேரமும் மது விற்பனை ஜோராக நடப்பதாக புகார் எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய காஞ்சிபுரம் மார்க்கெட் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசிக்கின்றனர். அந்த பகுதியில் உள்ள மக்கள் டாஸ்மாக் பாரை தாண்டி தான் செல்ல வேண்டும். பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் அமர்ந்து மது அருந்துவார்கள். அந்த பகுதி முழுவதும் மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகளாக காணப்படுவதால் அப்பகுதி மக்கள் அவ்வழியே … Read more காஞ்சிபுரம்: 24 மணி நேரமும் டாஸ்மாக் கடையில் மது விற்பனை – பொதுமக்கள் அவதி

இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்… இது ஹனுமனின் ‘பிறப்பிடம்’ சர்ச்சை!

கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் ஹனுமனின் பிறந்த இடம் தொடர்பாக மோதலும் சர்ச்சையும் வலுத்துள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வடக்கு கர்நாடகாவின் ஹம்பிக்கு அருகிலுள்ள கிஷ்கிந்தாவில் உள்ள அஞ்சயநாத்ரி மலையில் ஹனுமன் பிறந்தார் என்று கர்நாடக தரப்பு கூறுகிறது. ஆந்திர தரப்போ, திருமலையின் ஏழு மலைகளில் உள்ள அஞ்சநாத்ரியை ஹனுமன் பிறந்த இடமாகக் கைகாட்டுகிறது. இந்த இரண்டு இடங்களைத் தாண்டி, இப்போது, ராமாயணத்தில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில் மூன்றாவது இடமும் ஹனுமன் பிறப்பிடமாக இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர். ஹனுமனின் பிறந்த … Read more இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்… இது ஹனுமனின் ‘பிறப்பிடம்’ சர்ச்சை!

நடிகர் டொவினோ தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதி!

தனுஷின் ‘மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்தவரும் மலையாளத்தின் முன்னணி நடிகருமான டொவினோ தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் டொவினோ தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உடனேயே தனிமைப்படுத்திக்கொண்டேன். ஆனால், எனக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே தொற்று உறுதியாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடித்த ’என்னு நின்டே மொய்தீன்’ ‘லூசிஃபர்’ படங்களின் … Read more நடிகர் டொவினோ தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தீவிரம்…குஜராத் மருத்துவமனைகளில் வரிசைகட்டி நிற்கும் ஆம்புலன்ஸ்கள் – காரிலேயே இறந்த நோயாளி

கொரோனா தீவிரம்…குஜராத் மருத்துவமனைகளில் வரிசைகட்டி நிற்கும் ஆம்புலன்ஸ்கள் – காரிலேயே இறந்த நோயாளி India oi-Jeyalakshmi C By Jeyalakshmi C | Updated: Thursday, April 15, 2021, 14:47 [IST] அகமதாபாத்: மருத்துவமனை வாசலில் வரிசை கட்டி நிற்கும் ஆம்புலன்ஸ்கள், காரில் உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகள் என குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. படுக்கை வசதி பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவமனை வாசலில் நீண்ட வரிசையில் … Read more கொரோனா தீவிரம்…குஜராத் மருத்துவமனைகளில் வரிசைகட்டி நிற்கும் ஆம்புலன்ஸ்கள் – காரிலேயே இறந்த நோயாளி

மருத்துவமனையில் இருந்து திருடு போன 320 டோஸ் தடுப்பூசி| Dinamalar

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், மருந்து கிடங்கில் இருந்த 320 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் திருடுப்போயிருப்பது தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சாஸ்திரி நகரில் கந்த்வாதியா அரசு மருத்துவமனை உள்ளது. அங்குள்ள மருந்து கிடங்கில் பொதுமக்களுக்கு பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அதில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் 32 சிறிய புட்டிகள் (320 டோஸ்) மருந்து மாயமாகி இருந்ததை மருத்துவமனை நிர்வாகத்தினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, சாஸ்திரி நகர் போலீஸ் … Read more மருத்துவமனையில் இருந்து திருடு போன 320 டோஸ் தடுப்பூசி| Dinamalar