அனல் பறக்குது! மாவட்டத்தில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்…அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிரம்

கடலுார் : வரும் 6ம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 136 வேட்பாளர்கள் இறுதிக்கட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மார்ச் 12ம் தேதி துவங்கி, 19ம் தேதி நிறைவடைந்தது. அன்று மனுக்கள் பரிசீலிக்கப்பட்டதில், 155 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.இதையடுத்து, 22ம் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள். திட்டக்குடி தொகுதியில் 2 பேர், விருத்தாசலம் 8, பண்ருட்டி 1, கடலுார் 4, சிதம்பரம் தொகுதியில் 4 பேர் என மொத்தம் 19 பேர் வாபஸ் பெற்றனர். மற்ற தொகுதிகளில் யாரும் வாபஸ் பெறவில்லை.

இதனையடுத்து, திட்டக்குடி தொகுதியில் 15 பேர், விருத்தாசலம் 29, நெய்வேலி 12, பண்ருட்டி 15, கடலுார் 15, குறிஞ்சிப்பாடி 12, புவனகிரி 14, சிதம்பரம் 11, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 13 பேர், என, அ.தி.மு.க., – தி.மு.க., – பா.à®®.க., – பா.ஜ., – காங்., – அ.à®®.மு.க., – தே.மு.தி.க., – வி.சி., உள்ளிட்ட பிரதான கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் என, மொத்தம் 136 பேர் களத்தில் உள்ளனர்.தேர்தலில் சிட்டிங் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி புது முகங்களாக விருத்தாசலத்தில் தி.மு.க., கூட்டணியில் காங்., ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க., பிரேமலதா, பா.à®®.க.,வில் கார்த்திகேயன், நெய்வேலியில் கடந்தமுறை போட்டியிட்ட பா.à®®.க., ஜெகன், சிதம்பரத்தில் தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அப்துல் ரகுமான், காட்டுமன்னார்கோவிலில் தி.மு.க., கூட்டணியில் வி.சி., சிந்தனைச்செல்வன், திட்டக்குடியில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., வேட்பாளர் தடா பெரியசாமி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்களை அதரித்து கடலுார் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி எம்.பி., காங்., மாநிலத் தலைவர் அழகிரி, மா.கம்யூ., பாலகிருஷ்ணன், எம்.பி.,க்கள் கனிமொழி, திருச்சி சிவா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, இந்திய கம்யூ., முத்தரசன், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், விஜய பிரபாகரன், நடிகை நமீதா, அ.ம.மு.க., தினகரன், சகாயம் ஐ.ஏ.எஸ்., உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர்.இந்நிலையில் வரும் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாளை (4ம் தேதி) இரவு 7:00 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

இதனையடுத்து வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமுள்ளதால், காலை, மாலை மற்றும் இரவு நேரத்தில் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்கள், கூட்டணி கட்சியினருடன் சென்று அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.