அவிசாவளை – மாதொல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் உள்ள இரும்பு உருக்கு நிலையமொன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எரிவாயு சிலிண்டர் வெடிப்பே இந்த அனர்த்தத்திற்கு காரணம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் இந்த, சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்திருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.