இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 23,649 பேருக்கு கொரோனா

ரோம்,
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இத்தாலி 7-ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில், இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 23,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 36 லட்சத்து 07 ஆயிரத்து 083 ஆக உள்ளது.

இத்தாலியில் ஒரே நாளில் 501 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 09 ஆயிரத்து 847 ஆக உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 29.33 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 5.63 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.